tamilnadu

img

சிஏஏ விவகாரம்: வங்கதேசத்திலிருந்து இந்தியா வந்தவர் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ ஆக வேண்டும்- சத்யநாதெல்லா

வங்கதேச நாட்டில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த  தலைமை நிர்வாக அதிகாரியாக வரவேண்டும் என்பதை தான் விரும்புகிறேன் என இன்போசிஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி சத்யநாதெல்லா தெரிவித்துள்ளார்.
மோடி அரசு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் நோக்குடன் குடியுரிமை திருத்து சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில்  நாடு முழுவதும் மாணவர்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறனர். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லா நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நகரத்தில் நடத்த கூட்டத்தில் பங்கேற்ற பேசியபோது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
“குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடக்கும் விஷயங்கள் வருத்தத்தைக் கொடுக்கின்றன. மிகவும் தவறானது. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வரும் ஒருவர், மிகப் பெரிய சாதனையைப் புரிய வேண்டும் என நான் விரும்புகிறேன். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அடுத்த சிஇஓவாக பொறுப்பேற்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்று கருத்து தெரிவித்துள்ளார் நாதெல்லா.
அதைத் தொடர்ந்து, மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து, நாதெல்லாவின் கருத்தை விரிவாக பதிவிட்டது. “ஒவ்வொரு தேசமும் தனது எல்லையை தீர்மானித்து, தேசப் பாதுகாப்பை முன்னிருத்தி, அகதிகளுக்கான சட்டங்களை வரையறுக்க வேண்டும். ஒரு ஜனநாயகத்தில் அதன் மக்களும், அரசும் இந்த எல்லைக்குள் எப்படி செயல்படலாம் என்பதை விவாதித்து முடிவெடுப்பார்கள். நான் இந்திய கலாசாரத்தால் பேணப்பட்டு, இந்தியாவின் பலதரப்பட்ட கலாசாரங்களுக்கு இடையில் வளர்ந்தவன். அமெரிக்காவில் குடிபெயர்ந்த அனுபவத்தைப் பெற்றவன். என்னைப் பொறுத்தவரையில், குடிபெயர்ந்த ஒருவர் இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை ஆரம்பித்தோ, பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்தியோ இந்திய சமூகத்தையும் பொருளாதாரத்தையும் முன்னேற்றும் சூழல் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்,” என்று நாதெல்லா குறிப்பிட்டுள்ளார்.
நாதெல்லாவின் கருத்துகளை வரவேற்றுள்ளவரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா “சத்ய நாதெல்லா இந்த  கருத்தை சொன்னதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதைப் போன்ற கருத்தை நம் நாட்டின் ஐடி துறை முதலாளிகள் முதலில் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். இப்போது கூட சொல்லலாம்,” என்றுள்ளார்.
கடந்த மாதம் ராமச்சந்திர குஹா, பெங்களூருவில் சிஏஏவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்று கைதானார் குறிப்பிடத்தக்கது.

;