tamilnadu

img

கொரோனா கோரத்திற்கு இடையிலும் 62 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைத்த பாஜக

பாட்னா:
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரட்டிப்பாகி இருக்கிறது. அது சமூகப் பரவலாக மாறி விட்டது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். தொற்றைக் கட்டுப்படுத்தத் தெரியாமல், பல்வேறு மாநில அரசுகள் விழிபிதுங்கி நிற்கின்றன.ஆனால், மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக-வின் தலைவர்களோ, அடுத்தடுத்து வரவுள்ள பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட6 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளனர்.

குறிப்பாக, பீகார் மாநிலத்திற்கு நவம்பர் 29-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டாக வேண்டும் என்ற நிலையில், அம்மாநிலத்தின் அனைத்து (243) சட்டமன்றத் தொகுதிகளுக்கும், தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.மேலும் தலா 7 பேர் கொண்ட பூத்கமிட்டி-களை ஏற்படுத்த உத்தரவிட்டு, அந்த வாக்குச்சாவடி குழுவிற்கு ‘சப்தரிஷி’ என்று நாமகரணமும் சூட்டியுள்ளது.இந்த சப்தரிஷி குழுவில் தலித்துக்கள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று விரிவான திட்டமிடுதலையும் கட்சியினருக்கு வகுத்துக் கொடுத்துள்ளது.

பாஜக-வின் பீகார் மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு, மே 11 அன்று பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “243 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு இருந்த போதிலும் கிட்டத்தட்ட 62 ஆயிரம் பூத் கமிட்டி தலைவர்களைத் தேர்வு செய்து முடித்துவிட்டோம். மீதமுள்ள பூத் தலைவர்களின் தேர்வு விரைவில் நிறைவடையும்” என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

;