tamilnadu

img

பொறியியல் பட்டதாரிகளுக்கு ராணுவ அதிகாரிப் பணிகள்

சென்னையிலுள்ள ராணுவ Officers Training Academy-ல் ராணுவ அதிகாரி பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள், திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Service Commission Officers (Tech,) Men & Women (October 2020)
மொத்த காலியிடங்கள்: 191 (பாட வாரியான காலியிடங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.)
இதில், 2 இடங்கள் போரில் வீர மரணமடைந்த வீரர்களின் விதவை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பள விகிதம்: ரூ.56,100 – ரூ.1,77,500.
வயது வரம்பு: 20 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விதவை பெண்கள் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Civil/Mechanical/Electrical/Elelcrtanics/TeleCommunication/IT/Architecture/Architecture/Aeronautical/Aeronautical/Avionics/Computer Science Engg போன்ற பாடப்பிரிவுகள் அல்லது மேற்கண்ட பாடங்களை ஒரு பாடமாக கொண்ட ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பு BE/B. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். BE/B. Tech படிப்பை முடித்து பட்டம் பெற இருக்கும் இறுதியாண்டு பொறியியல் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை

பொறியியல் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் முதல் கட்ட நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். முதல்கட்ட தேர்வில் Psychological Test, Group Test மருத்துவத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். இதில், வெற்றி பெற்றவர்கள் இரண்டாம் கட்டமாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர். சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வைத்து 49 வாரம் ராணுவ அதிகாரி பணிக்குரிய பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் PG Diploma in Defence Management and Straegic studies என்னும் பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர். பயிற்சி முடித்தவுடன் இந்திய ராணுவத்தில் லெப்டனன்ட் அதிகாரியாக பணி அமர்த்தப்படுவர். நேர்முகத்தேர்விற்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மூன்றாம் வகுப்பு A/C ரயில் கட்டணம் வழங்கப்படும். பயிற்சி October 2020-ல் ஆரம்பமாகும். 

விண்ணப்பிக்கும் முறை

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.2.2020

 

;