tamilnadu

img

கொரோனா கொள்ளையிலும் அம்பானி காட்டில் அடைமழை!

ரூ. 60 ஆயிரம் கோடி முதலீடுகளை அள்ளினார்

புதுதில்லி, மே 9- கொரோனா வைரஸ் என்ற கொள்ளை நோயால் உலக சந்தைகள் நெருக்கடியில் இருந்து வருகின்றன. பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பில் ஒரு பகுதி குறைந்துவிட்டது. அவர்களின் சொத்து மதிப்பு 8.7 லட் சம் கோடி டாலரிலிருந்து 8 லட்சம் கோடி டாலராக சரிந்துள்ளது என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் கூட, பெருங் கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 23 சதவிகிதம் சரிந்து 313 லட்சம் கோடி டாலராக குறைந்து விட்டதுடன், பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையும் 106-இல் இருந்து; தற்போது 102 ஆக குறைந்து விட்டது என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இவ்வளவு பெரிய கொரோனா கொள்ளைக்கு இடை யிலும், இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி காட்டில் மட்டும் தொடர்ந்து அடைமழை கொட்டுவது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் பேஸ்புக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ வின் 9.9 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்து ரூ. 43 ஆயிரத்து 574 கோடி முதலீடுகளை அள்ளியுள்ளார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா வைச் சேர்ந்த சில்வர் லேக் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ரூ.5 ஆயிரத்து 655 கோடி முதலீடு செய்ய முன்வந்திருக்கும் நிலையில், தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரிய பங்கு முதலீட்டு நிறுவன மான விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ரிலையன்ஸ் ஜியோவின் 2.32 சத வீதப் பங்குகளை ரூ.11 ஆயிரத்து 367 கோடிக்கு வாங்கியுள்ளது. சவூதி அரே பிய எண்ணெய் நிறுவனம் ஆராம்கோ அடுத்ததாக ரிலையன்ஸ் பங்குகளை வாங்க வரிசையில் நிற்கிறது. இந்த ஒப்பந்தங்களால் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
 

;