tamilnadu

img

பாஜகவின் தமிழக கிளையாக அதிமுக

பாஜக மூத்த தலைவர்களால் கூட பாராட்டப்படாத அள விற்கு அதிமுக மோடியை புகழ்கிறது. அதிமுக, பாஜக-வின் தமிழக கிளையாக மாறினாலும் ஆச்சரியமில்லை.உங்கள் வீட்டிலேயே நல்ல பிள்ளை எது என்று கேட்டால், அதோ பாருங்கள் கூரை மேல் ஏறி தீ வைத்துக் கொண்டிருக்கிறதே அதுதான் என்பதைப்போல மோடி ஆட்சி உள்ளது.தமிழ்நாட்டிற்கு மோடி ஏதாவது நல்லது செய்திருக்கிறாரா? பாஜக ஆட்சியில் விவசாயிகள் பிச்சைக்காரர்களாக மாற்றப் பட்டுள்ளனர். ராமதாஸ், பிரேமலதா போன்றவர்கள் விவசாய கடன் ரத்து செய்வோம் என்கிறார்கள். அதை பிரதமர் சொல்ல மறுப்பது ஏன்?தமிழக விவசாயிகள் 125 நாள் தில்லியில் தங்கி போராடினர். உச்சகட்டமாக நிர்வாணப் போராட்டம் கூட நடத்தினர். நடிகைகளுக்கு நேரம் ஒதுக்கிப் பேசும் மோடி , விவசாயிகளுக்கு 2 நிமிடம் ஒதுக்கி சந்திக்க மறுத்தார். அம்பானியின் சொத்து தகராறில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் பிரதமர் எந்த ஒரு மாநில விவசாயியையும் பார்த்து பேசமறுத்துவிட்டார். அவரைத் தான் இந்தியா வின் சிறந்த பிரதமர் என்று எடப்பாடி சொல்கிறார். வெயிலில் உங்களுக்கு மூளை குழம்பி விட்டது என்று சொன்னால் என்ன தவறு?


தமிழக அரசின் ஆண்டு பட்ஜெட்டே 2 லட்சம்கோடி ரூபாய்தான். ஆனால், கடந்தாண்டு பெருமுதலாளிகளின் கடன் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயை மோடி தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் விவசாயிகளின் கடனை மட்டும் ரத்து செய்ய முடியாதாம்.பாஜக ஆட்சியில் ஆண்டுக்கு 16 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து அடுத்த 3 மாதத்திற்குள் 50 ஆயிரம் பேரை வெளி யேற்றப் போகிறார்கள். ரயில்வேயில் 12 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் கிராமத்திற்கு ஒரு விஏஓ என்பது மாறி 4 கிராமத்திற்கு ஒருவர் என்ற நிலை உள்ளது. பணமதிப்பிழப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. ஜிஸ்டியால் வியாபாரிகள் கடனாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மோடிக்கு எதிர்பலை வீசுகிறது. மறுபுறம் பாஜகவிற்குள்ளேயே உள்ளடி வேலை நடந்து கொண்டிருக்கிறது. மோடியும், நிதின்கட்காரியும் மாறிமாறி காலை வாரிக் கொண்டு இருக்கிறார்கள்.இப்படியாக நாடு முழுவதும் தாமரை கருகிக்கொண்டு இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் எப்படி மலரும்?

;