tamilnadu

img

மன அழுத்தத்தில் 43 சதவிகித இந்தியர்கள்.. வேலையிழப்பு ஏற்படுத்திய பெரும் தாக்கம்

புதுதில்லி:
கொரோனா பொதுமுடக்கத் தால் ஏற்பட்ட வேலை - வருமான இழப்பு காரணமாக, 43 சதவிகித இந்தியர்கள் மன அழுத்தப் பிரச்சனைக்கு ஆளாகியிருப்பது, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம், கடந்த 5 மாதமாக தொடர்கிறது. சிறு, சிறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் தொழில்உற்பத்தி, வர்த்தக நடவடிக்கைகள் இயல்பான நிலைக்கு திரும்ப வில்லை. கோடிக்கணக்கான ஏழை - நடுத்தர மக்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். உணவுத் தேவைகளை சமாளிப்பதற்குக் கூட வருவாய் இன்றி,மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நிறுவனங் களில் ஊதியக் குறைப்பும் பணிநீக்கமும் தொடர்வதால், ஒவ்வொருவருக்கும் எதிர்காலம் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், பொதுமுடக்க கால வேலை- வருவாய் இழப்பு, ஊதியக் குறைப்பு மற்றும் பணிநீக்க நடவடிக்கைகளால் சுமார் 43 சதவிகித இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு ஒன்றுகூறியுள்ளது.‘கோகி’ (GOQii) என்ற சுகாதார அமைப்பு நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமா னோரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில், 26 சதவிகிதம் பேர் லேசான மன உளைச்சலாலும், 11 சதவிகிதம் பேர் மிதமான மனஉளைச்சலாலும், 6 சதவிகிதம் பேர்தீவிரமான மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.மேலும், பொதுமுடக்கத்தை யொட்டி வாழ்க்கை முறைகள் கடுமையாக மாறி வருவதால், 3 சதவிகித இந்தியர்கள் மனச்சோர்வு நோய்க்கும் ஆட்பட்டுள்ளதாக அந்த ஆய்வு கூறியுள்ளது.

;