tamilnadu

img

370 நீக்கம் குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவு

 புதுதில்லி, ஆக.6- ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவு திருத்தம் செய் யப்பட்டிருப்பது தொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது: “குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட அரசியல் அமைப்பு ஆணை (ஜம்மு - காஷ்மீருக்கு பொருந்தும்) 2019, பொது தகவல்களுக்காக வெளியிடப்படுகிறது. அரசியலமைப்பின் 370- ஆவது பிரிவு (1) பிரிவின் படி வழங்கப்பட்ட அதிகாரங்க ளைப் பயன்படுத்துவதில், ஜம்மு - காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலை வர் பின்வரும் உத்தரவை பிறப் பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்: 1. (1) இந்த உத்தரவை ஜம்மு - காஷ்மீருக்கு அரசிய லமைப்பு பொருந்தும் உத்த ரவு என்று அழைக்கலாம் 2019. (2) இது உடனடியாக அமலுக்கு வருகிறது. 1954-ல் இருந்த அர சியலமைப்பு சட்ட உத்தரவு புதுப்பிக்கப்படுகிறது. 2. அவ்வப்போது திருத்தப் பட்ட அரசியலமைப்பின் அனைத்து விதிகளும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துடன் தொடர்புடையதாக இருக்கும். மேலும் அவைகளில் பொருந்தக்கூடிய விதிவிலக்கு கள் மற்றும் மாற்றங்கள் பின் வருமாறு: பிரிவு 367-க்குள் சேர்க்கப்பட்ட 4வது உட்பிரிவு, “அரசியலமைப்பின் நோக்கங் களுக்காக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துடன் பொருந்தும்” என்று குறிப்பிடுகிறது. (ஏ) இந்த அரசியலமைப் பைப் பற்றிய குறிப்புகள் அல்லது அதன் விதிமுறைகள் அரசியலமைப்பின் குறிப்புகள் அல்லது அந்த மாநிலத்துடன் தொடர்புடைய விதிமுறைகள் எனக் கருதப்படும்: (பி) ஜம்மு - காஷ்மீரின் தலைமை குறித்து குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப் பட்ட நபருக்கான குறிப்பு களில், பதவியில் இருக்கிற மாநில அமைச்சர்கள் குழு வின் ஆலோசனையின் பேரில் செயல்படுகிற ஜம்மு - காஷ்மீர் ஆளுநருக்கான குறிப்பு களாகக் கருதப்படும்: (சி) மாநிலத்தின் அரசாங் கம் என்பது அம்மாநிலத்தின் அமைச்சர்கள் குழுவின் ஆலோ சனையின் பேரில் செயல்படும் ஆளுநரைப் பற்றிய குறிப்பு களாக கருதப்படும். (டி) அரசியலமைப்பின் 370-ஆவது பிரிவு (ஆர்ட்டிகிள்) (3) வது பிரிவில், பிரிவு (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள மாநில அரசியலமைப்புச் சபை, மாநில சட்டமன்றம் என்று படிக்கப்படும். இவ்வாறு குடியரசுத் தலை வரின் உத்தரவில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

;