tamilnadu

img

பாஜக கூட்டணிக்கே 182 இடங்கள்தான் ரகசிய சர்வேயால் ஆர்எஸ்எஸ் அதிர்ச்சி!

புதுதில்லி, ஏப்.5-

தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில், பாஜககூட்டணி 250 இடங்கள் வரை பெறலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ஸூம் அவர்களாகவே ரகசிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியதாகவும், இதில், பாஜக கூட்டணிக்கு 182 இடங்களுக்கு மேல்கிடைக்காது என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ரகசிய சர்வேயில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜகமட்டும் 151 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் மட்டும் தனித்து141 இடங்களிலும், காங்கிரஸ்கூட்டணி 216 இடங்களிலும் வெற்றிபெறும் என தெரியவந்துள்ளது.உத்தரப்பிரதேசத்தில், கடந்த முறை 71 இடங்களை பாஜக கைப்பற்றியிருந்த நிலையில், இம்முறை பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, ராஷ்ட்ரிய லோக்தளம் கூட்டணி அங்குள்ள 60 சதவிகித தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்கட்சிக்கு 45 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.‘நாக்பூர் டுடே’ ஊடகம் இதுதொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது.

;