tamilnadu

img

பீகாரில் கொத்து கொத்தாக செத்து மடிந்த குழந்தைகள்....கிரிக்கெட் ஸ்கோர் கேட்ட பாஜக அமைச்சர்....

பாட்னா:
பீகாரில் மூளைக்காய்ச்சல் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே கிரிக்கெட் நிலவரம் பற்றி கேட்டறிந்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக 110-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் மூளைக்காய்ச்சல் சாவுஅதிகரித்து வருகிறது. 130 குழந்தைகள், மூளைக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய்த் தாக்கம் அதிகஅளவில் உள்ளது. ‘அக்யூட் என்சபி லிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

இதனால் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இந்நிலையில்தான், பீகாரில் மூளைக்காய்ச்சல் குறித்து, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே, திடீரென கிரிக்கெட் நிலவரம்பற்றி பேசி, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளார்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், முசாபர்பூரில் ஞாயிறன்று, பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டேவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். குழந்தைகள் இறப்பு தொடர்பாக, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஹர்ஷ் வர்தனும், மங்கள் பாண்டேவும் இணைந்தே பதிலளித்தனர்.

அப்போதுதான், குழந்தைகள் இறப்பை விட்டுவிட்டு, திடீரென “தற்போதைய கிரிக்கெட் நிலவரம் என்ன, எத்தனை விக்கெட் விழுந்துள்ளது?” என்று அமைச்சர் மங்கள் பாண்டே செய்தியாளர்களைப் பார்த்துக் கேட்டது, கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ளது.இதனால், குழந்தைகள் உயிரிழப்பைக் காட்டிலும் கிரிக்கெட் ஸ்கோர்தான் முக்கியமா? என ஆவேசமடைந் துள்ள எதிர்க்கட்சிகள், குழந்தைகள் இறப்பின் தீவிரத்தை அமைச்சர் மங்கள் பாண்டே கொஞ்சமும் உணரவில்லை என்பதையே இச்சம்பவம் காட்டுவதாக கண்டித்துள்ளனர்.

மங்கள் பாண்டே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும்இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இக்கோரிக்கையை முன்வைத்து, பீகாரின் அவுரங்காபாத் நகரில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ஜன அதிகாரகட்சி ஆதரவாளர்கள் மங்கள் பாண்டே வுக்கு கறுப்புக் கொடியும் காட்டியுள்ளனர்.இதனிடையே, மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், மூளைக்காய்ச்சல் தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசிக்கொண்டிருக்க, மத்தியஇணையமைச்சர் அஸ்வினி குமார்ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, “நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்” என்று அஸ்வினி குமார் தப்பித்து ஓடியுள்ளார்.

;