tamilnadu

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கக்கோரி மனு

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள

தருமபுரி, ஜூலை 30-  தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்த னர். இம்மனுவில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல உயிர்களை பறித்து வருகிறது. தமிழகத்திலும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இத்தகைய நிலையில், ஊடகவியலாளர்கள் அவ்வப்போது நடக்கும்  நிகழ்வுகளை செய்திகளாக மாற்றி பொதுமக் களுக்கும், அரசிற்கும் பாலமாக செயல்பட்டு வருகிறோம். ஆகவே, கொரோனா நோய்த்த டுப்பு நடவடிக்கைகளின் போது பணியாற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறைகள் மற்றும் கிருமிநா சினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்க வேண்டும் . மேலும், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர் அடையாள அட்டை, வாகன வில்லை, இலவச பேருந்து பயண அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இம்மனுவினை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாவட்டத் தலை வர் வே.விசுவநாதன், மாவட்டச் செயலாளர் ஜி‌.லெனின் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான பத்திரிகையாளர்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
 

;