tamilnadu

img

அக்.15ல் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு சிபிஎம் கோத்தகிரி இடைக்குழு பேரவையில் தீர்மானம்

உதகை, செப்.29- பட்டா இல்லாத மக்களை திரட்டி அக். 15 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந் திரள் முறையீடு நடத்துவது என சிபிஎம் கோத்தகிரி இடைக்குழு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோத்தகிரி இடைக்குழு பேரவை கூட்டம் மாவட்ட குழு உறுப்பினர் கே.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. பேரவை கூட்டத்தை மாவட்ட செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் துவக்கி வைத்து பேசினார். மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி சிறப் புரையாற்றினார். இதைத்தொடர்ந்து, இக்கூட்டத்தில் கோத்தகிரி இடைக் குழுவின் செயலாளராக வி.மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டார். இதில், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுந்தரம்,வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, அக்டோபர் 15 ஆம் தேதியன்று பட்டா இல்லாத மக் களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் பெருந் திரள் முறையீடு நடத்து வது. அக்டோபர் 20 ஆம் தேதியன்று உதகையில் கட்சியின் சார்பில் நடை பெறும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற் றாண்டு விழாவில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துக் கொள்வது. நவம்பர் 2 ஆம் தேதி தோழர் சின்னதுரை நினைவு அலுவலகத்தின் துவக்க நிகழ்ச்சியை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;