tamilnadu

img

கொரோனா பரவல் எதிரொலி.... மேலும் 14 நாடுகளுக்குத் தடை விதித்த ஜப்பான்

டோக்கியோ
ஆசியாவின் மேற்கு எல்லை நாடான ஜப்பானில் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் உள்ளது. அங்கு இதுவரை 13 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 385 பேர் பலியாகியுள்ள நிலையில், 1,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா எழுச்சி பெற்ற காலத்தில் ஜப்பான் அரசு ஊரடங்கு விதித்து 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தடை விதித்தது. அதாவது தடைவிதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் ஜப்பானுக்குள் நுழைய அனுமதி கிடையாது. மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான நுழைவுத் தடை மற்றும் விசா கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30-ல் இருந்து மே மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரஷ்யா, பெரு, சவுதி அரேபியா உள்ளிட்ட மேலும் 14 நாடுகள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், அங்குச் சென்று வந்தவர்கள் ஜப்பானுக்குள் நுழையத் தடை விதிப்பதாகவும், நாளை முதல் இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே அதிரடி உத்தரவிட்டுள்ளார். 

;