tamilnadu

img

உலகில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தைக் கடந்தது... 

தில்லி 
உலகைத் தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. ஆசியாவின் புதிய கொரோனா மையமாக  உருவெடுத்துள்ள இந்தியாவிலும் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை  ஆகியவற்றில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், உலகில் மொத்த கொரோனா பாதிப்பு 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்து ஸ்பெயின் (2.60 லட்சம்), இத்தாலி (2.17 லட்சம்), பிரிட்டன் (2.11 லட்சம்) ஆகிய நாடுகள் முதல் நான்கு இடத்தில் உள்ளன. மேலும் இதுவரை 2 லட்சத்து 76 ஆயிரம் பலியாகியுள்ளனர். 13 லட்சத்து 94 ஆயிரம் பேர் கொரோனாவை வென்று குணமடைந்துள்ளனர். உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா டெஸ்ட்கள் அதிகமாக எடுக்கப்பட்டிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.   

;