tamilnadu

img

அமைச்சர் தொகுதியில் மறுக்கப்படும் ரேசன் அரிசி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை 24- மின்சாரத் துறை அமைச்சர் தொகுதியில் ஓய்வூதியம் பெறுவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ரேசனில் அரிசி விநியோகிக்கப்படாததைக் கண்டித்து விவசாய தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் வேலை இழந்த அனைத்து குடும் பங்களுக்கும் மாதம் ரூ 7,500 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மின்சாரத்துறை அமைச்சர் கே.தங்க மணி தொகுதி அம்மாசி பாளையம் அருந்திய தெருவில் ஓய்வூ தியம் பெற்று வரும் முதியோர்களுக்கு ரேசன் அரிசி மறுக் கப்பட்டு வருவதைக் கண்டித்து கொக்கராயன் பேட்டை காவல் சோதனைச்சாவடி முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சம்பூர்ணம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்க சாமி, வி.தொ.ச மாவட்ட தலைவர் சி.துரைசாமி, ஒன்றிய தலைவர் கதிர்வேல், சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோ கன், மாவட்ட துணைச் செயலாளர் கே.மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;