tamilnadu

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

நாமக்கல், ஆக. 19 - கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் பேசுகையில், கொரோனா நோயினால் ஏற்படும் இறப் பைத் தடுக்க வேண்டுமானால் கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற நீண்ட கால நோய்களுக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் இறப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். தனியார் மருத்துவமனைகளுக்குக் காய்ச்சலுடன் வரும் நோயா ளிகளின் விபரங்களை உடனடியாக சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை சுத்தமாகக் கழுவுதல், கிருமிநாசினி திரவங்கள் பயன்படுத்தி கைகளை சுத்தமாகப் பராம ரிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;