tamilnadu

img

குமரி மாவட்டத்தில் சிபிஎம் முன்முயற்சியில் கொரோனா தடுப்பு உதவி மையம்... ஆம்புலன்ஸ் சேவை விஜய் வசந்த் எம்.பி., தொடங்கி வைத்தார்.....

நாகர்கோவில்:
கொரோனா நோய்த்தொற்று  அலையின் கொடும் தாக்குதலில் குமரி மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட குழு தன்னார்வ தொண்டர்களை கொண்டு கொரோனா தடுப்பு உதவி மையம்அமைத்து சமூக பணியாற்றி வருகிறது. அதன் ஒருபகுதியாக  மருத்துவ வாகன சேவை துவக்க நிகழ்ச்சி, இலவச மருத்துவ முகாம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நாகர்கோவில் கோணம் சிஎம்சி பள்ளி எதிர்புறம் அமைந்துள்ள கொரோனா உதவி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குமரி மாவட்ட கொரோனா தடுப்பு உதவிமைய அமைப்பாளர் எம்.அகமது உசைன்தலைமை வகித்தார். உதவி மையக்குழு உறுப்பினர் கே.தங்கமோகன் வரவேற்றார். கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி.விஜய் வசந்த் கொரோனா நிவாரண மருத்துவ உதவி வாகன சேவையை  அறிமுகம் செய்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து, சிஎம்சி பள்ளிக்கூட வளாகத்தில் கோணம் சுற்று வட்டார பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாம் நிகழ்ச்சியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின்  துவக்கி  வைத்தார். இதில்,ஆயுர்வேத மருத்துவர் ஆர்.இளஞ்செழியன், ஹோமியோபதி மருத்துவர் டி.கே.நாகேந்திரன், சித்த மருத்துவர் எஸ்.ஆர்.மகேஷ், அலோபதி மருத்துவர் பாலிங்டன் அல்போன்சோ ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் மருந்துகள் வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு காய்ச்சல், ஆக்சிஜன் மற்றும் ரத்த அழுத்த அளவுகள் பரிசோதனை செய்யப்பட்டது. 

மேலும் சுற்றுச்சூழல் வாரத்தை நினைவுப்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், என்.உஷா பாசி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் குறித்து  உரையாற்றினர்.  உதவி மைய குழு அலுவலகப் பொறுப்பாளர் ஆர்.ராஜு,உதவி மையக்குழு உறுப்பினர்கள் என்.எஸ்.கண்ணன், மலைவிளை பாசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;