tamilnadu

தேனி மாவட்டத்தில் நான்கு மருத்துவர் உட்பட 80 பேருக்கு கொரோனா; மேலும் ஒருவர் பலி

தேனி, ஜூலை 6- தேனி மாவட்டத்தில் பயிற்சி மருத்து வர்கள் நான்குபேர் உட்பட 80  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது. கொரோனா உறுதி செய்யப்படாத நிலையில் கம்பத்தை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . கம்பம் வஉசி திடலை சேர்ந்த 48 வயது நபர் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவ திப்பட்டு வந்த நபர் ஞாயிறன்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திங்கள்கிழமை அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். மேலும் கம்பத்தை சேர்ந்த மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கம்பம் சர்ச் தெருவில் தனியார் மருத்துவ மனை நடத்திவந்த 71 வயது மருத்துவர், அவரது மனைவி, மேலும் நான்கு பெண் கள் உட்பட 14 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள். மேலக்கூடலூர் கரிமேட்டுப் பாட்டியை  சேர்ந்த 62 வயது  முதியவர், ரெங் கப்பகவுண்டர் தெருவைச் சேர்ந்த 25 வயது வாலிபர், கேகே.பட்டியை சேர்ந்த 65 வயது முதியவர், வாய்க்கால் தெருவைச் சேர்ந்த 40 வயது நபர், சி.புதுப்பட்டியை சேர்ந்த 56 வயது  நபர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போடி சுப்புராஜ் நகர் 5- ஆவது தெருவைச் சேர்ந்த 60 வயது நபர், கும்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த 48 வயது பெண், அசேன் உசேன் தெருவைச் சேர்ந்த 60 வயது நபர் என மூன்று பேருக்கு தொற்று உறுதியானது. பெரியகுளத்தில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பணிபுரியும்  திண்டுக்கல்லை சேர்ந்த கணவன் -மனைவி மருத்துவர்கள், 26 வயது பயிற்சி மருத்துவர்கள் என ஆண்டி பட்டியில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தேனியில் ஏற்கனவே 1009 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் திங்க ளன்று  ஒரே நாளில் 80 பேருக்கு பாதிப்பு கண்ட றியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,089 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 368 பேர் கொரோனாவில் இருந்து குணம டைந்து வீடு திரும்பியுள்ளனர்.

;