tamilnadu

தேனி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா

தேனி, ஜூன் 14- தேனி மாவட்டத்தில் பெரியகுளம், கோம்பை, தர்மாபுரி, ராசிங்காபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 10 பேருக்கு ஞாயிற் றுக்கிழமை கொரோனா உறுதி செய் யப்பட்டுள்ளது. பெரியகுளத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டதை தொடர்ந்து சனிக்கிழமை அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .பின்னர் அவரது குடி யிருப்பு பகுதியில் எடுக்கப்பட்ட சோதனை யில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டது. வடகரை பூந்தோட்டத் தெருவைச் சேர்ந்த 55 வயதுடைய ஆண், தென்கரை அழகப்பன் தெருவைச் சேர்ந்த முறையே 69, 57 வயதுடைய கணவன், மனைவி, முறையே 39 மற்றும் 16 வயதுடைய தாய், மகன், 60 வயதுடைய முதியவர், 26 வயது இளைஞர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.

இடுக்கி மாவட்டத்திலுள்ள நெடுங்கண் டம் பகுதியிலிருந்த வந்த கோம்பையைச் சேர்ந்த 53 வயதுடைய நபர், வீரபாண்டி அருகே தர்மாபுரியிலிருந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச் சைக்குச் சென்ற 39 வயதுடைய பந்தல் தொழி லாளி என மொத்தம் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  போடி அருகே இராசிங்காபுரம் கரியப்ப கவுண்டன்பட்டி, காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 29 வயது பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் கடந்த 8.6.20ந் தேதி சென்னையில் இருந்து வந்தார். இவர்களை மருத் துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து ஞாயிறன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 அதிகரித்து 157 ஆக உயர்ந்துள்ளது.

;