tamilnadu

img

குடும்பத்திற்கு ரூ 7,500 வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் மதுரை வாடிப்பட்டியில் ஏ.லாசர் கைது

தேனி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஜூன்.4- தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் அடையாள அட்டை  வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாக உயத்தி  சம்பளம் 600 ரூபாய்   வழங்க வேண்டும்,  கொரோனா காலம் நிவாரணமாக மாதம்7500ருபாய் மூன்று மாதத்திற்கு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராம நாதபுரம் மாவட்டங்களில் வியாழனன்று மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மதுரை வாடிப்பட்டியில்  மாவட்டத் தலைவர் உமா மகேஸ்வ ரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலை வர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் வேல்பாண்டி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கௌசல்யா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

மதுரை கிழக்கு யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றியச் செயலாளர் மச்சராஜா, தலைவர் அழ கர்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உசிலம்பட்டியில் மாவட்டச் செயலாளர் பாண்டியன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத்தலைவர் செல்லக் கண்ணு, ஒன்றியத் தலைவர் பாலு, செயலாளர் மார்க்கண்டே யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேற்கு ஒன்றியம் மஞ்சம்பட்டி, சமயநல்லூரில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் ராம மூர்த்தி, மேற்கு ஒன்றியத் தலைவர் பச்சையப்பன், பொரு ளாளர் முருகன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முரு கேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றி யச் செயலாளர் மணிக்காளை, தலைவர் தீத்தாரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேனி
கம்பத்தில் ஏரியாத்தலைவர் எம் காஜாமைதின் தலைமை வகித்தார். ஏரியா பொருளாளர் ஜே. ஆர். பழனிச்சாமி, எம்மணி கண்டன் மாயாண்டி கணபதி நீர்பாய்ச்சுவோர் சங்க செயலா ளர் எஸ் பன்னீர்வேல், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. ஜெயராஜ், ஏரியாதலைவர் எஸ்.சின்னராஜ் கே. கர்ணன் எஸ்.மணிகண்டன், பெ.அய்யப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரியா செயலாளர் ஜி.எம். நாகராஜன், வாலிபர் சங்க  மாவட்டத் தலைவர் கே ஆர் லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போடியில் தங்கபாண்டி தலைமை வகித்தார். விவசாயி கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், விவசாயி கள் சங்கத் தலைவர்கள் எஸ்.கே.பாண்டியன், மூக்கையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலர் எஸ்.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . உத்தமபாளையத்தில் ஏரியா தலைவர் ஏ.பெருமாள் தலைமை வகித்தார்.

ஏரியா செயலாளர் எஸ்..சுருளிவேல், விவ சாயிகள் சங்க மாவட்டத் துணைத்தலைவர் எல்.ஆர்.சங்கர சுப்பு, ஏரியா செயலாளர் எஸ்.சஞ்சீவி, ராஜேந்திரன், சூரியா கலா, சிமு.இப்ராகிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  சின்னமனூரில் ஒன்றியத் தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ஏவி.அண்ணாமலை, அம்ச மணி, கருப்பையா, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பி..சேகர், என்.நடராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியகுளத்தில் தாலுகா தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார் சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி. கண்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சு.வெண்மணி, மன்னர் மன்னன், ஜி.முத்துகிருஷ்ணன், ஆர்.கே.ராமர், எஸ். சௌந்திரபாண்டி, ஜி சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டியில் ஏரியா செயலாளர் எஸ்.அய்யர் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், கந்தசாமி, வி.சின்னன், பிடி.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .

தேனியில் ஏரியா செயலாளர் இ.தர்மர் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத் தலைவர் வி.என்.ராமராஜ், கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மயிலாடும்பாறையில் மாவட்டத் தலைவர் தயாளன், ஒன்றி யச் செயலாளர் பெருமாள், ஒன்றியத் தலைவர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மண வாளன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் போஸ், சங்கரபாண்டியன், கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றியச் செயலாளர் பால்சாமி, மாவட்டப் பொருளாளர் ஜோதிலட்சுமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விஜயமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் திருமலை நகர செய லாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சசிகுமார் ஆகி யோர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் இராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ராமர், இராஜபாளையம் நகர் செயலா ளர் மாரியப்பன், சிவஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வத்திராயிருப்பில் நடைபெற்ற போராட்டத்தில் வட்டா ரக்குழு உறுப்பினர் மார்க்கண்டன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத்தலைவர் மணிக்குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் வத்திராயிருப்பு நகர் செயலாளர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்ற போராட்டங்களில் மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை, மாவட்டச் செயலாளர் ஆர்.சந்திரமோகன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன், மாவட்டச் செயலாளர் வி.முருகன், பொருளாளர் மனோஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எம்.முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

பழனி
பழனி தொப்பம்பட்டியில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.அருள்செல்வன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ். கம லக்கண்ணன், எம்.முருகசாமி, டி.துரைசாமி, கே.முருகன், தண்ட பாணி, குழந்தைவேலு, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  நத்தத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பழனியப்பன், மாவட்ட நிர்வாகிகள் பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன், சுமதி ஆகி யோர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரத்தில் மாவட்டத் தலைவர் வசந்தாமணி வகித்தார். ஓன்றிய நி;ர்வாகிகள் பி.முருகேசன், பெரியசாமி ஏ.கார்த்திக்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  வடமதுரையில் மாவட்டப்பொருளாளர் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் எம்.கே.சம்சுதீன், சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் மலைச்சாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத்தலைவர் டி.முத்துச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

 வேடசந்தூரில் ஒன்றியச் செயலாளர் சிக்கணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் முனியப்பன், விவசாயிகள் சங்க செயலாளர் சி.எஸ்.முத்துச்சாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  குஜிலியம்பாறையில் ஒன்றியத்தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், விவ சாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் தங்கவேல், ஒன்றியச் செயலாளர் ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் தம்பிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜ ரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  சாணார்பட்டியில் சரவண கோபால் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வெள்ளைக்கண்ணன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் பாப்பாத்தி, ஜான் பெலிக்ஸ் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் மாவட்டத் தலைவர் நா. கலையரசன், தாலுகா தலைவர் என்.வெங்க டேஷ், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஆர் குருவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் செல்வராஜ், டாக்டர் வான் தமிழ் எம்.ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.கணேசன், மாவட்டத் துணைச் செயலாளர் முருகன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்ரீமயில்வாகனம் ஆகி யோரும் திருவாடானையில் தாலுகா தலைவர் கே.ரத்தினம், தாலுகா செயலாளர் வி. அருள்சாமி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு, சகாயம், ஜெயகாந்தன், ஆதிரத்தினம் ஆகியோரும் கமுதியில் தாலுகா செயலாளர் மாரிமுத்து, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.முத்து விஜ யன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

;