tamilnadu

ஒரு நாளைக்கு 25 பேருக்கு மட்டும்தான் கொரோனா தொற்று பரிசோதனையா? முன்னாள் எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா கேள்வி

மன்னார்குடி, ஜூலை 1- மன்னார்குடியில் காலை 11 மணிக்குள் வரும் 25 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுவதாகவும் அதற்கு மேல் வரு பவர்களுக்கு ஏன் பரிசோதனை செய்யப்படு வதில்லை என்று சட்டமன்ற முன்னாள் உறு ப்பினர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பி யுள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது:   பரிசோதனையில் இந்தியாவிலேயே முத லிடத்தில் இருக்கிறோம் என்று தமிழக அரசு பெருமை பேசும் நிலையில், பல இடங்க ளில் சரியான நேரத்தில் வரும் நோயாளிக ளுக்கு பரிசோதனை செய்யாமல் இன்ன மும் இருட்டடிப்பு  செய்யப்படுகிறது.  மன்னார்குடியில் காலை 11 மணிக்குள் வரும் 25 பேருக்கு மட்டுமே பரிசோதனை  செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கு மேல் வருபவர்களுக்கு ஏன் பரிசோதனை செய்யப்படுவதில்லை. அடுத்த நாள் காலை வரை அவர்கள் ஏன் காத்திருக்க வேண்டும். அந்த ஒருநாள் அவர்கள் வெளியே சுற்றி னால்கூட பலருக்கு தொற்று ஏற்படக் கூடிய  அபாயம் உள்ளது என்பதை அரசு புரிந்து கொள்ளவில்லையே. உதாரணமாக, மன்னார்குடியில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் கும்ப கோணத்தில் பணி புரியும் நிலையில், முதல் நாள் கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் பரிசோதித்த போது சாதா ரண காய்ச்சல் என்று அவரை அங்கிருந்து  மருந்துகளைக் கொடுத்து அனுப்பி விட்டார்கள். பிறகு மன்னார்குடி மருத்துவ மனையிலும் அதேபோல் சாதாரண காய்ச்சல் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. மூன்றாவது முறை வலுக்கட்டாயமாக  பரி சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று  கூறி சிலரின் பரிந்துரையுடன் பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்ப ட்டுள்ளது. மூன்று நாட்கள் தொடர்ந்து வை ரஸ் கிருமி அவர் மூலம் பரவியிருக்கும் என்பதுதான் உண்மை.  கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் சென்னையிலிருந்து வந்த மூன்று பேருக்கு தொற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கிரா மத்தில் உள்ள அவர்களின் உறவினர் பெண்மணி ஒருவருக்கும் தொற்று ஏற்ப ட்டுள்ளது. மேற்கண்டவர்களுக்கு பரிசோ தனை செய்வதில் அரசு மெத்தனம் காட்டி யதால் சில நாட்கள் அவர்கள்  கிராமத்தில்  உள்ள பலரை சந்தித்துள்ளது மட்டுமல்லா மல் மளிகை கடை, டீக்கடை போன்ற தொழில்  ரீதியாகவும், பலருக்கும் தொற்று ஏற்பட்டி ருக்கக் கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இப்போது அக்கிராமத்தில் கிட்டத்தட்ட 40 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இச்சோதனை எண்ணிக்கை போதாது என்றே  பொதுமக்கள் கருதுகின்றனர். ஆகவே அந்த கிராமத்தில் சமுதாய பரவல் ஏற்ப ட்டால் அதற்கு  அரசாங்கமே முழுப் பொறுப்பாகும்.  இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆனால் இப்படி பலர் பாதிக்கப்பட்டும்கூட, அவர்களை சரியான நேரத்தில் பரிசோ திக்காமல் இருப்பது  வருத்தத்திற்கு உரியது.  இந்திய அளவில் பரிசோதனை அதிகம் செய்தோம் என்பது ஓர் சாதனை அல்ல. இந்திய அளவில் அதிக தொற்று இருக்கும் பெரிய மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளோம் என்பது மிகப் பெரிய வேதனை. சென்னையில் உத்தரவிடப்பட்ட ஊரடங்கு காரணமாக அங்கிருந்து வெளியேறிய பலர் இதர மாவட்டங்களுக்கு வரும்பொழுது இதுவரை தொற்று குறைவாக இருக்கும் மாவட்டங்களுக்கு கூட தொற்று பரவும் அபா யம் இருக்கிறது. இன்று தமிழகத்தில் சென்னை அல்லாத இதர மாவட்டங்களில் தொற்று மும்மடங்கு உயர்ந்துள்ளது. இது அரசின் மோசமான திட்டமிடப்படாத நடவடிக்கையையே காட்டு கிறது.  ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை  எந்தத் தொற்றும் இல்லாமல் பாதுகாப்பாக இருந்த மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகு திகளில், தற்போது மளமளவென்று கொரோ னாதொற்று பரவிக் கொண்டிருக்கிறது. கொ ரோனா தொற்று அதிகம் பரவினால் மன்னா ர்குடி பகுதியில் போதுமான மருத்துவ வசதி கள் இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது. எனவே பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பி. ராஜா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.  - ப. தெட்சிணாமூர்த்தி

;