tamilnadu

img

3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்லி 18 ஆவது நாளாக தேஜோ தொழிலாளர்கள் போராட்டம்

திருவள்ளூர், மே 9- திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகில் உள்ள இருளிப்பட்டில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான தேஜோ தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 159-தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்தமுன்னேற்றமும் ஏற்படவில்லை.சிஐடியு சங்கத்தை விட்டு வெளியேறினால் சலுகைகள் வழங்கப்படும் என நிர்வாகம் தொழிலாளர்களை நிர்பந்திக்கிறது. ஆனால் தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்து ஒற்றுமையுடன், உறுதியாகவும் போராடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும், காவல்துறையை வைத்து மிரட்டி தொழிலாளர்களை பணியவைக்கும் முயற்சியைகைவிட வேண்டும், சட்ட விரோதமாக செயல்படும் நிர்வாகத்தில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், துணைத் தலைவர் பி.நடேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.நடராஜன், சுப்பரமணி, கே.நடராஜன், லிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலார்களுக்கு நிதி உதவி வழங்கினர்.

;