tamilnadu

img

கேஎஸ்யு மாநிலத் தலைவர் மீது ஆள்மாறாட்ட வழக்கு பதிவு

திருவனந்தபுரம்:
கோவிட் சோதனைக்கு போலியான பெயர், முகவரி கொடுத்து ஆள்மாறாட்டம் செய்ததற்காக காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கே.எஸ்.யு மாநில தலைவர் கே.எம்.அபிஜித் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தொற்று நோய்கள் தடுப்பு சட்டம் மற்றும் ஆள்மாறாட்டம் ஆகியவற்றின் கீழ் அபிஜித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போத்தன்கோடு பஞ்சாயத்து தலைவர் கே.வேணுகோபாலன் நாயர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போத்தன்கோடு கிராம பஞ்சாயத்தில் உள்ள தச்சப்பள்ளி எல்பி பள்ளியில் நடைபெற்ற கோவிட் பரிசோதனையின் போது கே.எஸ்.யு தலைவர் தனது பெயரையும் முகவரியையும் மறைத்து மாறுவேடமிட்டார். தலைநகர் திருவனந்தபுரத்தில் பல போராட்டங்களில் பங்கேற்ற அவர் பலருடன் தொடர்பு கொண்டுள்ளார்.

அண்ணன் தருவார்… 
அண்மையில் திருவனந்தபுரத்தில் கேஎஸ்யு போராட்டம் நடந்த பிறகு அபிஜித்தும் அவரது சகாக்களுடன் தேநீர் குடித்துள்ளனர். கடைக்காரர் அதற்கான காசு கேட்டபோது அண்ணன் தருவார் என்று கூறி காசு கொடுக்காமலே சென்று விட்டனர். தற்போது கோவிட் பரிசோதனைக்கு கே.எம்.அபிஜித் என்கிற தனது பெயரை அபி.எம்.கே என கொடுத்து ஆள்மாறாட்டம் நடந்துள்ளது.
இதை விமரிசித்து தனது முகநூல் பதிவில் மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி, ‘டீ குடித்தால் காசு.. அண்ணன் தருவார், கோவிட் சோதனைக்கு பெயரும், முகவரியும்.. அண்ணன் தருவார்’ என குறிப்பிட்டுள்ளார். இது கேரள சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது  

;