tamilnadu

img

உலகப் பொருளாதார வளங்கள் பார்வை அரசு கல்லூரியில் கருத்தரங்கம்

அவிநாசி, நவ. 3- அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் உலகப் பொரு ளாதார வளங்கள் பார்வை என்ற தலைப்பில் வெள்ளி யன்று கருத்தரங்கம் நடைபெற்றது. அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச வணிக துறை சார்பில் “ உலகப் பொருளாதார வளங்கள்; ஒரு பார்வை” என்ற தலைப்பில்  கருத்தரங்கம் நடைபெற்றது. முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவி ஆர். லோகநாயகி வரவேற்றார். முதல்வர் (பொ) சி.குலசேகரன் முன்னிலை வகித்தார். கோவை கே.எஸ். ஜி கலை அறிவியல் கல்லூரியின் பொருளாதார இணை பேராசிரியர் முனைவர்.எம்.ராஜா சர்வதேச வணிக துறை மாணவர்களிடம் கலந்துரையாடினார்.  சர்வதேச வணிக  துறைத் தலைவர் முனைவர்.செ.பால முருகன்  கருத்தரங்கை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் கேள்விகள் கேட்டுத் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். நிறைவாக முதலாமாண்டு வணிகவியல்  துறை மாணவி மிகாஷினி  நன்றி கூறினார்.

;