tamilnadu

தற்காலிக மருத்துவமனையாக மாறும் சிக்கண்ணா கலைக் கல்லூரி

திருப்பூர், ஜூலை 27- திருப்பூரில் கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனையாக சிக் கண்ணா கலைக் கல்லூரி தயார்படுத் தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. இந்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தாலுகா வாரியாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 150 படுக்கை கள் கொண்டு வார்டுகள் அமைக்கப் பட்டது. அதுமட்டுமல்லாமல் ஜெய்வா பாய் பள்ளி, அவிநாசி மகாராஜா கல் லூரி, தாராபுரம் அரசு ஐ.டி.ஐ மற்றும் உடுமலை அரசுக் கல்லூரி என தற்கா லிக மருத்துமனைகளும் அமைக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.  இதனைத்தொடர்ந்து தற்போது சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியும் தற்காலிக மருத்துமனையாக செயல் படுவுள்ளதாக சுகாதரத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், இங்கு கொரோனா அறிகுறியே இல்லாத வர்களுக்கு சிகிச்சை அளிக்கவுள்ள தாகவும், தற்போது அறைகள் சுத்தம் செய்யப்பட்டு படுக்கை, கட்டில்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவ தாகவும் தெரிவித்தனர்.

;