tamilnadu

அவிநாசியில் தொடர் திருட்டு: அச்சத்தில் பொதுமக்கள்

அவிநாசி, அக். 15- அவிநாசி பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களைத் தடுக்கவும், திருடர்களைப் பிடிக்கவும் முடியாமல் காவல் துறையினர் திணறுவதால் பொதுமக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். அவிநாசி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக காமராஜ் நகரில் சில தினங்களுக்கு முன்பு ஒருவீட்டில் திருட்டு நடந்த நிலையில், அங்குள்ள மற்றொரு வீட்டிலும் திருடர் கள் இருவர் திருட முயன்றனர். அவர்க ளின் நடமாட்டம் ஒரு வீட்டிலிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், மர்ம நபர்கள் இந்தி எழுத்து களால் வீட்டில் குறிப்பு எழுதி செல்கின்றனர். இதுமட்டுமின்றி, ஆள் நடமாட்டம் இல் லாத சாலையில் தனியாக செல்வோரி டம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப் பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக காவல் துறையில் பல முறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கிராமங்கள் தோறும் ‘புகார் பெட்டி’ வைக்கப்பட்டு, அக்கிராமங்களை கண்காணிக்கும் பொறுப்பைக் குறிப்பிட்ட காவலர் வசம் ஒப்படைக்கப்பட்டது. சம் மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினரின் செல்போன் எண்ணும் எழுதி வைக்கப்பட்டது. மேலும், கிராமங்களுக்குப் புதிதாக வரும் நபர்கள் உட்பட சந்தேகப்படும்படியான விஷயங்கள் குறித்து தகவல் தெரிவிக்க லாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கண்காணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.  தற்போது, அவிநாசி காவல்துறையின் குற்றப்பிரிவில் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நிரப்பப்பட்டது. உதவி ஆய்வாளர் பணியிடமும் காலியாக உள்ளது. மேலும், இரு காவலர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒருவர் நீதிமன்ற பணியையும், மற்றொருவர் எழுத்தர் பணி யையும் கவனிக்கின்றனர்.  இதற்கிடையில், சட்டம் ஒழுங்கு பிரி வில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் தான் குற்ற வழக்குகளை கையாள்கின் றனர். இருக்கின்ற சொற்ப அளவு காவலர் களும், வாகனச்சோதனை, தலைக்கவ சம் வழக்கு போடும் பணியில் ஈடுபடுத் தப்படுகின்றனர். எனவே, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை அடையாளம் காண்பது காவல் துறையின ருக்குச் சவாலாக உள்ளது.  சபாநாயகர் தொகுதி என்ற அந்தஸ்து அவிநாசிக்கு இருந்தாலும், மக்களின் பாது காப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே உள்ளது. (ந.நி)

;