tamilnadu

img

ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் சமூக விரோத சக்திகளை தடுத்திடுக சந்திராபுரம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு

திருப்பூர், ஜூலை 29 – திருப்பூர் சந்திராபுரம்  அருகே  இந்திரா நகர் பகுதியில் கொடிக் கம்பம் அமைக்கும் பிரச்சனையில் இரு பிரிவினர் பிரச்சனை செய்வ தால் மக்கள் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சமூக விரோத சக்திகளைத் தடுக்க  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சிய ரகத்தில் திங்களன்று வாராந்திர குறை தீர் நாள் கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம், ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ முத்து மாரி யம்மன் கோவில் கமிட்டி சார்பாக தலைவர் எஸ்.தேவராஜ், செய லாளர் எம்.சுப்பிரமணியம் மற்றும் இப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இக்குடியி ருப்பில் இந்து, முஸ்லீம், கிறிஸ் துவ மத மக்களும், அனைத்து சாதி மக்களும் என 200 குடும்பங்கள் எந்த மதமாச்சர்யமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். ஊர்த் திருவிழா ஐந்து நாட்கள் அமைதி யான முறையில் கொண்டாடி வருகிறோம்.  ஞாயிறன்று எங்கள் பகுதி யில் ஒரு மத சமுதாயத்தைச் சேர்ந் தோர் கொடிக் கம்பம் நட்டு கொடி யேற்றினர். அதை ஏற்கனவே கொடிக் கம்பம் நட்டுள்ள இன் னொரு பிரிவினர்  கொடிக்கம்பம் நடக்கூடாது என கூறியதால் தக ராறு ஏற்பட்டு காவல் துறை தலை யிட்டுள்ளது. இது போன்ற செயலால் எங்கள் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்த சில சமூக விரோத சக்திகள் முயற்சி செய் கின்றன. எனவே இப்பகுதியில் எந்த அரசியல், மத அமைப்பும் தன் அடையாளச் சின்னங்கள், கொடி கள் முதலியவற்றை நிறுவ வேண் டாம். அங்குள்ள எல்லா கொடிக் கம்பங்களையும் நீக்க உத்தரவிட வேண்டும். அத்துடன்  இதன் அருகில் தனியார் இடத்தில் முள்பு தராக உள்ள இடத்தில் இளைஞர் கள் இரவு நேரத்தில் மது அருந்து வது, சீட்டாட்டம் போன்ற செயல் களில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுக்க காவல் ரோந்து செல்ல ஏற் பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

பள்ளியை அகற்ற எதிர்ப்பு
முத்துப்புதூர் பள்ளியை இடம் மாற்றம் செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மார்க் சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் மனு அளித்தார். 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் நகரின் மையப்பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக இப்பள்ளியை இட மாற்றம் செய்வதாகக் கூறப்படு கிறது. இப்பகுதி மாணவர்களின் கல்வி வாய்ப்பை பாதிக்கும் இந்த முடிவை கைவிட வேண்டும், பள்ளி தவிர்த்து அருகில் உள்ள இடங்களை ஸ்மார்ட் சிட்டி திட் டத்துக்குப் பயன்படுத்திக் கொள் ளலாம் என்றும் டி.ஜெயபால் கூறியுள்ளார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.சின்னச்சாமி அளித்த மனுவில், மக்காச்சோளப் பயிர்களில் அமெரிக்க படைப்புழு தாக்குதலில் விவசாயிகள் இழப் பைச் சந்திக்கும் நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிவார ணத்தை ஊத்துக்குளி தாலுகா விவசாயிகளுக்கும் விடுபட்டு விடாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசூர் முதல் ஈங்கூர் வரை உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டதில் ஊத்துக்குளி தாலுகா செங்கப்பள்ளி, முத்தம் பாளையம் கிராமத்தில் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு நிவார ணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண் டுள்ளார். அதேபோல் திருப்பூர் பழவஞ் சிபாளையம் பகுதியில் வசித்து வரும் பட்டியலின குறவர் சமூகத்தி னர் சுமார் 50 குடும்பங்கள் கடந்த 30 வருடங்களாக அங்கு குடியி ருந்து வருவதாகவும், வரி செலுத்தி வரும் நிலையில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை என்பதால் உடனடியாக மேற்படி குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனக் கேட்டு மனு அளித்தனர். அதே போல் சாமளாபுரம் பகுதி மக்களும் குடியிருக்க வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர்.

;