tamilnadu

img

கூட்டுறவு பஞ்சாலை தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை துவங்குக.... அரசுக்கு சிஐடியு வலியுறுத்தல்....

திருப்பூர்:
தமிழகத்தில் கூட்டுறவு பஞ்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வுவழங்க ஒப்பந்த பேச்சுவார்த்தையை மாநில அரசு தொடங்க வேண்டும் என்று சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநிலநிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் சி.பத்மநாபன் தலைமையில் வெள்ளியன்று திருப்பூரில் நடைபெற்றது. சிஐடியு மாநில உதவித்தலைவர் எம்.சந்திரன், சம்ம்மேளன மாநில பொதுச் செயலாளர் எம்.அசோகன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கூட்டுறவு பஞ்சாலைகளில் ஊதிய ஒப்பந்தம் கடந்த 2020 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. உடனடியாக தமிழக அரசாங்கமும், கைத்தறி துணிநூல் துறை இயக்குநரும் நடவடிக்கை எடுத்து ஊதிய பேச்சுவார்த்தையை துவக்கி கூட்டுறவு பஞ்சாலை தொழிலாளிகளுக்கு புதிய ஊதியம் கிடைக்கச் செய்ய வேண்டும். என்டிசி ஆலைகள் இயக்க ஒன்றிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பஞ்சாலைகளில் தொழிற்சாலை சட்டங்கள் அமலாக்கப்படுவது இல்லை. வருங்கால வைப்புநிதி, இஎஸ்ஐ மருத்துவ திட்டத்திற்கான நிதி பிடிக்கப்படுவது இல்லை. ஒருவேளை பிடிக்கப்பட்டாலும் அது தொழிலாளர்கள் பயனடையக் கூடிய வகையில் அடையாள அட்டையை நிர்வாகங்கள் கொடுக்காமல் உள்ளன. வெளி மாநிலத்தொழிலாளர்களை மிக குறைவானஊதியத்தில் பஞ்சாலை தொழிற்சாலை வளாகத்திற்குள் அடைத்து வைத்து வேலை வாங்குகிறார்கள். பயிற்சியாளர்களுக்கு வழங்க வேண்டிய தினசரி குறைந்தபட்சம் ஊதியம் ரூ.477 வழங்காமல் உள்ளது. அதற்கு உரிய நட வடிக்கைகளை தொழிற்சாலை ஆய்வாளர்களும், தொழிலாளர் துறை அதிகாரிகளும் எடுக்காமல் உள்ளனர்.நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை,   திருப்பூர்,  திண்டுக்கல்,விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் இருந்து பஞ்சாலை தொழிலாளர்களுடைய நிலைமையை பற்றி விபரம் திரட்டுவது, இதன் அடிப்படையில் தொழிலாளர் பிரச்சனைகளில் தமிழக அரசு தொழிற்சாலைத் துறை மற்றும் தொழிலாளர்துறை ஆணையாளர் தலையீடு செய்யக் கோரி இயக்கம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

;