tamilnadu

img

ஓ.எல்.எக்ஸ் ஆன்லைன் மூலம் பண மோசடி பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையில் புகார்

திருப்பூர், டிச. 16 – இரண்டாம்தர பொருட்கள் விற்பனை செய்யும் ஓ.எல்.எக்ஸ் எனப்படும் ஆன்லைன் தளத்தின் மூலம் பண மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் மாநகர காவல் துறையில் புகார் அளித்துள் ளார். திருப்பூர் குமார் நகர் வலையங்காடு 6ஆவது வீதி யைச் சேர்ந்தவர் ஏ.விஜய். இவரது மனைவி வி.தீபா (21). இவர் தனது  கணவருக்கு தெரியாமல், இருசக்கர வாகனத்தை வாங்கி பரிசளிக்க விரும்பினார். இதைய டுத்து ஓ.எல்.எக்ஸ் தளத்தில் பார்த்தபோது கேடிஎம் ஆர்சி 200 எனப்படும் அதிவேக இருசக்கர வாகனம் விற்பனைக்கு இருப்பதாக பதிவிடப்பட்டிருந்தது. அதில் கொடுத்த முகவரியில் விசாரித்தபோது லோகேஷ் என்பவர் சூலூர் விமானப் படைப் பிரிவில் வேலை செய்து வருவதாகவும், அங்கிருக்கும் வாகன விற்பனைப் பிரிவு மூலம் வாகனங்களை விற்பனை செய்து வருவதாகவும், மேற்கண்ட வாகனத்தை ரூ.60 ஆயிரம் விலைக்கு விற்பதாகத் தெரிவித்துள் ளார். அத்துடன் முதல் தவணையாக குறிப்பிட்ட பணத்தை தனது வங்கி கணக்குக்கு அனுப்பும்படி கூறி வங்கிக் கணக்கு எண் மற்றும் பே டிஎம் எண் ஆகிய வற்றை வாட்ஸ் ஆப் மூலம் தீபாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவரைப் பற்றி விசாரித்தபோது லோகேஷ், சூலூர் விமானப் படையில் பணிபுரியும் சுக்தேவ் சிங் என்பவர் என இருவரது அடையாள அட்டை, ஆதார் கார்டு மற்றும் வாகனச் சான்று புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார். இதை நம்பி தனது கணவருக்குத் தெரியாமல் பே டிஎம் மூலம் ரூ.24 ஆயிரத்தை தீபா அனுப்பி வைத்துள்ளார். வண்டியை அனுப்பி வைக்கும்போது எஞ்சிய பணத்தை தருவதாக இருதரப்பினரும் பேசியி ருந்தனர். இதன் அடிப்படையில் வண்டியை அனுப்பி வைக்கும்படி தீபா கேட்டபோது, லோகேஷ் முழு பணத்தையும் செலுத்த வேண்டும், அப்போதுதான் வண்டியைத் தருவோம் எனக் கூறியிருக்கிறார். மேலும் வண்டியை காண்பிக்க தான் வர இயலாது, முழு பணத்தையும் அனுப்பி வையுங்கள் என தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலமும், தொலைபேசி மூலமும் கேட்டு வந்திருக்கிறார். எனவே இவரது செயல் மீது தீபாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதைய டுத்து திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாள ரிடம் இந்த விபரங்களைத் தெரிவித்து தீபா புகார் மனு அளித்துள்ளார். லோகேஷ் ஏமாற்றி பணத்தை மோசடி செய்திருப்பதால் அந்த பணத்தை மீட்டு தருவதுடன், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீபா தனது கணவருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வரு கின்றனர்.

;