tamilnadu

நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகளை மனிதாபிமானம் இல்லாமல் அலைக்கழிக்கும் வங்கிகள்

திருப்பூர், ஜூன் 18- கொரோனா தொற்று பாதிக் கப்பட்டிருக்கும் இந்த காலத்தில் வேலையின்மை, வறுமையில் சிக் கித் தவிக்கும் பல லட்சம் மக்க ளைக் காப்பாற்றுவதற்கு, நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும், வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை தருவது டன், பேரூராட்சி உள்ளிட்ட நகரப் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண் டும், கூலியை அதிகரிக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. ஆனால் மத்தியில் ஆளும் பார திய ஜனதா அரசின் அணுகுமுறை இதற்கு நேர் எதிரானதாக, தலை கீழாக இருக்கிறது. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு பட்ஜெட் டில் நிதி ஒதுக்கீட்டைக் குறைத் துவிட்டனர்.

அத்துடன் கடந்த ஆண்டுக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியைக் கூட தராமல் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதை சேர்த் துக் காட்டி கூடுதலாக ஒதுக்கியி ருப்பதாக கணக்குக் காட்டுகின்ற னர். பாஜக ஆட்சி இப்படி கொள்கை ரீதியாகவே கிராமப் புற விளிம்புநிலை உழைக்கும் மக் களைப் புறக்கணித்து வருவது ஒரு புறம் இருக்க, உள்ளூரில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்  மற்றும் வங்கிகள் அலைக்கழிப்பு செய்து துயரப்படுத்தி வருகிறது. ஏற்கெனவே மாதக்கணக்கில் இந்த மக்களுக்குத் தர வேண்டிய ஊதியம் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பகுதி பகுதியாக இவர்களது ஊதியம் அவர்களது ஜன்தன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் கையில் காசு இல்லா மல் கஷ்டப்படும் மக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் இருக்கும் சம்ப ளப் பணத்தை பெறுவதற்காக வங் கிகளுக்குச் சென்றால், இவர்களை வங்கி ஊழியர்கள் மனிதர்களா கவே பொருட்படுத்தாமல் அவமரி யாதை செய்வதாக குற்றஞ்சாட்டு கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கிரா மப்புறங்களில் உள்ள தேசியமய வங்கி கிளைகளில் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைப் பெறுவதற்காகச் சென்றபோது, வங்கி அலுவலர்கள் ஜன்தன் வங் கிக் கணக்கை சாதாரண சேமிப்புக் கணக்காக மாற்ற வேண்டும் என்று சொல்லி, அதற்கு ரூ.148 பணம் செலுத்தும்படி கட்டாயப் படுத்தியுள்ளனர். வேலையும், வரு மானமும் இல்லாத நிலையில் இந்த மக்களுக்கு ரூ.148 என்பது கணிசமான தொகையாகும். இந் தத் தொகை கூட இல்லாமல்தான் பல குடும்பங்கள் கஷ்டப்பட்டு வரு கின்றன.

இந்நிலையில் வங்கி அதி காரிகள் சூழ்நிலையைப் பற்றி கவ னிக்காமல் இந்த மக்களை கட்டா யப்படுத்தியது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார். ஜன்தன் வங்கிக்கணக்கை சாதாரண கணக்காக மாற்றாமல் சம்பளப் பணத்தை எடுக்க முடி யாது என்று கூறி விரட்டியுள்ள னர். இது தொடர்பாக அரசு எந்த அறிவிப்பையும், சுற்றறிக்கையை யும் அனுப்பியதாகத் தெரிய வில்லை. ஆனால் வங்கி நிர்வா கங்கள் ஏன் இப்படிச் செய்கிறார் கள் என்று கேட்டால் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் அந்த கிராமப்புறத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். எனவே மாவட்ட ஆட்சியர், கிராமப்புறத் தொழிலாளர்களின் தூயரத்தைப் புரிந்து கொண்டு இதுபோன்ற வங்கி ஊழியர்களின் செயலைத் தடுத்து நிறுத்துவது டன், அந்த தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சம்பளப் பணத்தை உடனடியாக வழங்கவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

;