tamilnadu

நெல்லையில் ரயில் டிக்கெட் முன்பதிவு பணத்தை திரும்ப பெற்ற பயணிகள்

திருநெல்வேலி ,ஜூன் 6- நெல்லை ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையம் திறக்கப்பட்டது. ஏற்க னவே முன்பதிவு செய்த பயணிகள் வந்து சமூக  இடைவெளியை கடைப்பிடித்து பணத்தை திரும்ப பெற்று சென்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு  முழுவதும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், ரயில்வே கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது. அதன்படி மார்ச்  31-ந் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்தோர், முன்பதிவு மையங்களுக்கு சென்று பணத்தை  திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று ரயி ல்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் 14-ந் தேதி வரையிலான டிக்கெட் கட்டணம் வருகிற 12-ந்தேதி முதல் வழங்கப்படும் என்றும், ஏப்ரல் 15-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலான டிக்கெட் கட்ட ணத்தை வருகிற 19-ந்தேதி முதல் பெறலாம் என்றும், மே 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலான டிக்கெட் கட்டணம் வருகிற 26-ந்தேதி முதல் வழங்கப்படும் என்றும், மே  16-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான டிக்கெட் கட்டணத்தை ஜூலை 3-ந் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப் பட்டு இருந்தது. ஜூன் 1-ந்தேதி முதல் 30-ந் தேதி வரையி லான டிக்கெட் முன்பதிவு கட்டணமானது, ஜூலை 10-ந் தேதி முதல் முன்பதிவு மை யங்களில் வழங்கப்படும் என்றும், குறிப்பிட்ட  தேதிகளில் பணத்தை திரும்ப பெற முடியா தவர்கள் பயணத் தேதியில் இருந்து 180 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும், பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முன்ப திவு மையங்கள் திறந்திருக்கும் எனவும், ரத்து  செய்யப்படும் டிக்கெட்டில் எந்த பிடித்தமும் இல்லாமல் முழு கட்டணமும் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரயில்  நிலையத்தில் உள்ள முன்பதிவு மையம்  திறக்கப்பட்டது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் வந்து சமூக இடைவெ ளியை கடைப்பிடித்து பணத்தை திரும்ப பெற்று சென்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி  முதல் மதியம் 2 மணி வரை முன்பதிவு கவுண்டர் மையம் செயல்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

;