tamilnadu

முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரமிழக்கச் செய்கிறது மோடி அரசு

மன்னார்குடி, ஏப்.10-புகழ்பெற்ற ஆசியாவின் இரண்டாவது பெரிய சதுப்பு நில அலையாத்திக் காடுகளைக் கொண்ட சுற்றுலா தலமான திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையின் வரலாற்று பெருமைமிக்க முத்துப்பேட்டை ரயில் நிலையம் ‘பி’ தரத்திலிருந்து ரயில்வே ஊழியர்களே இல்லாத ரயில்நிலையமாக தரமிழக்கச் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மை முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முத்துப்பேட்டையில் புகழ்பெற்ற ஜாம்பனோடை தர்கா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது. சுமார் 30 ஆயிரம் மக்கட்தொகை கொண்ட கடற்கரை நகரமான முத்துப்பேட்டை வருவாய் வட்டமாக அறிவிக்கப்பட வேண்டிய நகரமாகும். மன்னார்குடி - பட்டுக்கோட்டை - திருத்துறைபூண்டி சாலை போக்குவரத்தை இணைக்கும் இந்நகரின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காக மோடி அரசால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி நடவடிக்கையாக இது உள்ளதென திருவாரூர் மாவட்ட அரசியல் நோக்கர்கள் கூறுகிறார் கள்.ஒற்றை ஒப்பந்த நபரைக் கொண்ட ரயில் நிலையமாக மாற்றுவதற்குரிய ஒப்பந்த புள்ளி விளம்பரத்தை மதவாத மோடியின் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 9.4.2019 நாளிட்ட திருச்சி கோட்ட ரயில்வேயின் இந்த அறிவிப்பில் வளரமாணிக் கம், கண்டனூர் புதுவயல், மாங்குடி மாவூர்சாலை, ஆலத்தம்பாடி மணலி, அம்மனூர்இவைகளோடு ஓசையின்றி முத்துப் பேட்டை நகரையும் கடைசியில் மோடியின் ரயில்வே நிர்வாகம் சேர்த்துள்ளது.


இந்த சதி நீண்ட காலமாக திட்டமிட்டுவருவதை அம்பலப்படுத்தி இந்நகரின் ரயில் நிலையத்தை தரம் ‘பி’ தரத்திலிருந்து ‘டி’ தரமாக குறைக்கப்படக்கூடும் என தீக்கதிர் ஏடுதான் முதலாவதாக அதன் உள் நோக்கத்தை சந்தேகித்து 5.9.2016 அன்றே எச்சரிக்கை செய்து சிறப்புச் செய்தியை வெளியிட்டிருந்தது. இப்போது அது உண்மை என நிரூபணமாகியுள்ளது. ஏற்கனவே முத்துப்பேட்டை நிலையத்தில் முன் பதிவு வசதி சரக்கு ஏற்றும் இறக்கும் வசதி, வாரண்ட் மாற்றும் வசதிமூத்த குடிமக்கள் சலுகை கட்டண டிக்கெட்பெறும் வசதி உள்ளிட்ட வசதிகள் இருந்தன.இந்த வசதிகள் எல்லாம் இனிமேல் கிடைக்காது. இந்த மாத இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் திருவாரூர்-காரைக்குடிபிரிவு ரயில் சேவைகள் துவக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2.4.1894 பிரிட்டிஷ் இந்தியாவில் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முத்துப்பேட்டை ரயில் நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படவிருப்பதற்கு பதில் ரத்து செய்யப்படவிருக்கிறது. மோடிஅரசின் அப்பட்டமான மதவாத அரசியலுக்கு இது மேலும் ஒரு உதாரணம். இதற்குமுத்துப்பேட்டை மக்கள் மட்டுமல்ல திருவாரூர் மாவட்ட மக்களும் எந்த விதத்திலும்அனுமதிக்க மாட்டார்கள் என்பதுடன் 18.4.2019 தேர்தலில் இதற்கு ஒரு சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்பது நிச்சயம்.


நமது செய்தியாளர் 

;