tamilnadu

img

பொய் வழக்குகளை வாபஸ் பெறுக! ஜாக்டோ- ஜியோவினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், செப்.14-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காந்திபார்க் அருகில் 9 அம்ச கோரி க்கைகளை வலியுறுத்தி வெள்ளி மாலை ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குடந்தை பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் எம்.என்.சாந்தாராமன் ப.முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ சங்கத்தினருக்கு கோரிக்கை விளக்க பேரணி நடத்த காவல் அதிகாரிகள் அனுமதி மறுத்த போதும் ஆர்ப்பாட்டத்தில் தொடக்கப்பள்ளிகளை சீரழிக்கும் அரசாணை 145 ரத்து செய்திட வேண்டும் 2019-ம் ஆண்டின் போது நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட 17 பி மற்றும் பொய் வழக்குகளை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என முழக்க மிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய லாளர் ரங்கசாமி அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்ட செயலாளர் அன்புமணி, துணை செயலாளர் சண்முகம் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் விஸ்வேஸ்வரன் மதிய ழகன் சுப்பிரமணியன் ரமேஷ் ஆசிரியர் அமைப்பைச் சார்ந்த அறிவுடைநம்பி, இதயராசா, முருகன், குமார்  கம்பன்கணேன் கலைச்செல்வன், அழகர், இராஜ்குமார்  மீனாகுமாரி சுமத்ரா மற்றும் திரளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதி யர்கள் கலந்து கொண்டனர். 

மன்னார்குடி

மன்னார்குடி நகராட்சியின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டூர் ஜான் பிரிட்டோ ஆகியோர் தலைமை வகித்தனர்.  மாவட்ட ஜாக்டோ ஜியா உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் அ.சுவிக்கின்ராஜ் வி.சோமசுந்தரம் சண்முகவடிவேல் முரளி பாலசுப்பிரமணியம் ஆகியோர் உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் 290 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

;