tamilnadu

காந்தி மார்க்கெட்டில் தரைக்கடை வாடகை திடீர் உயர்வு

திருச்சிராப்பள்ளி, ஏப்.6-


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.பி.பாபு மற்றும் அனைத்து காய்கறி கடை சங்க நிர்வாகிகள் ஜெகன், சந்துரு, முத்து, கந்தன் உள்ளிட்டோர் சனிக்கிழமை அன்று நிருபர்களிடம் கூறியதாவது:திருச்சி காந்தி மார்க்கெட்டில் 1300 தரைக்கடைகள், 800 கட்டிட கடைகள் உள்ளன. காந்தி மார்க்கெட்டில் தரைக்கடைமற்றும் வாகனங்கள் உள்ளே செல்வதற்கும் கட்டணம் வசூல்செய்யப்பட்டு வருகிறது. காந்தி மார்க்கெட்டின் ஒப்பந்தம் முடிந்து புதிய ஒப்பந்ததாரர் வரும் போது, 10 சதவீத கட்டணத்தை இதுநாள் வரை செலுத்தி வந்தோம். இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய ஓப்பந்ததாரர் ஏலம் எடுத்துள் ளார். அவர் கட்டண வசூலை 50 முதல் 70 சதவீதம் வரைஉயர்த்தி உள்ளார். காந்தி மார்க்கெட்டில் இரு சக்கர வாகனம் நுழைய ரூ.5-லிருந்து 10, லாரிக்கு ரூ.50-லிருந்து 150, வேன் வாகனத்திற்கு ரூ.40-லிருந்து 100 என உயர்த்தி உள்ளனர். மேலும் தலைசுமைக்கும் கட்டணத்தை உயர்த்திஉள்ளனர். எங்கள் பொருட்கள் அழுகும் பொருட்கள். இன்று விற்கவில்லை என்றால் பின்னர் விற்கமுடியாது. லாபமோ, நஷ்டமோ எங்களையே சாரும். வியாபாரிகளிடமே ஒரு வியாபாரி வியாபாரம் செய்வது ஏற்புடையதாக இல்லை. வியாபாரமே இல்லாத சூழ்நிலையில் கட்டணத்தை 50 லிருந்து 70 மடங்கு உயர்த்தி கேட்பது நியாயமல்ல. தற்போது எங்கள் தரப்பு பிரச்சனையை கூறியுள்ளோம். இதுதொடர்பாக குத்தகைதாரர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், 10 சதவீதம் கட்டணம் உயர்த்தி கொடுக்க தயார். ஆனால் அவர்கள்எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் கட்டணத்தை உயர்த்தி தரமாட்டோம். இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்றனர்.

;