tamilnadu

img

போக்ஸோ சட்டத்தின் மூலம் மரண தண்டனை குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி

திருச்சிராப்பள்ளி, செப்.4- திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த கருத்த ரங்கம் நடைபெற்றது. இதில் ஊட்டசத்து குறித்து நடத்தப் பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் தேசிய குழந் தைகள் பாதுகாப்பு ஆணை மையத்தின் உறுப்பினர் ஆனந்த் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு வெற்றி மாணவியர்களுக்கு பரிசு களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது: தேசிய குழந்தைகள் பாது காப்பு ஆணைய மையம் கடந்த ஒன்றரை மாதங்களில் 12 மாநிலங்களில் 5 ஆயிரம் புகார் மனுக்களை பெற்று அதில் 4 ஆயிரம் மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்பட் டுள்ளது. போக்சோ சட்டத்தின் மூலம் மரண தண்டனை விதிக்கப்படும் என தெரிய வந்ததால் குற்றங்கள் குறைய வாய்ப்புகள் அதிக மாகவே உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவி யர் அனைவரும் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். அதன் மூலம் தங்களது உடல்நலத்தை பாதுகாத்திட வேண்டும்.  சத்தான மற்றும் சரி விகித உணவு குறித்து அறிந்து கொள்ளும் வகை யில் செப்டம்பர் மாதம் ஊட் டச்சத்து மாதமாக விழிப்பு ணர்வு ஏற்படுத்த தமிழகத் தில் உள்ள பள்ளி, கல்லூரி, அங்கன்வாடிகளில் ஊட்டச் சத்து குறித்து மாணவ, மாண வியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

;