tamilnadu

img

ஆன்லைன் மூலம் மின்சாரம், பால் கட்டணத்தை செலுத்த மக்களுக்கு அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பாக வெளிமாநிலப் பேருந்துகள் குறைப்பு 

புதுக்கோட்டை/தஞ்சாவூர்,  மார்ச் 20- வெளிமாநிலங்களிலிருந்து புதுக் கோட்டைக்கு வரும் பேருந்துகளின் இயக்கத்தைப் பாதியாகக் குறைத்து ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிமாநிலங்களிலிருந்து புதுக் கோட்டைக்கு வரும் பேருந்துகளின் இயக்கத்தைப் பாதியாகக் குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்கள் தேவையற்ற பயணங்களை முற்றி லும் தவிர்த்திடத் தொடர்ந்து அறி வுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை யினை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள் ளது எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்த்திடும் வகையில் மின்சாரம், தொலைபேசிக் கட்டணம் மற்றும் ஆவின் பால் கட்டணம் போன்ற வற்றைச் செலுத்த அலுவலகங்களு க்கு வருவதை முற்றிலுமாகத் தவிர்த்து ஆன்லைன் மூலமாகக் கட்டணங்களைச் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தில் கட்டணத்தை www.tabgedcH.gHv.in என்ற இணை யத்தளம் மூலமாகவும், தொலைபேசிக் கட்டணத்தை www.pHrtal.osbl.in என்ற இணையத்தளம் மூலமாகவும், ஆவின் பால் கட்டணத்தை முகவர்கள் வங்கி கணக்கில் இணையம் மூலமாக வும் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது. எனவே, பொது மக்கள் ஆன்லைன் மூலமாகக் கட்டணங்களைச் செலுத்திப் பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்து ஒத்துழைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். 

மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட விசைப் படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோ சனைக் கூட்டம் மல்லிப்பட்டினம் துறை முக மீன் ஏலக்கூட வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச் செய லாளர் ஏ.தாஜூதீன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.இராச மாணிக்கம், செயலாளர் வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கப் பொ றுப்பாளர்கள் டி.செல்வக்கிளி, த.மருத முத்து, அ.இப்ராஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “கொரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க மீன்களைத் தனித்தனியாகச் சுகாதாரமான முறை யில் கூட்டம் கூடாமல் பிரித்து விற்பதைச் சில நாட்களுக்கு மட்டும் நடைமுறை படுத்த வேண்டும். மீன் சாப்பிடுவதால் கொரோனா தாக்குதல் ஏதும் ஏற்படாது என மத்திய, மாநில அரசுகள், சுகாதார நிறுவனங்கள் அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  மேலும் வைரஸ் தொற்று அதிகமா கப் பரவுதல் காரணமாக  முன்னெச்ச ரிக்கையாக மாவட்ட விசைப் படகு களும், மல்லிப்பட்டினம் வடக்கு சங்க நாட்டுப்படகு மீனவர்களும் வேலை நிறுத்தம் செய்து, மீன் மார்க்கெட்டுக்கு விடுமுறை விடுவது, மறு அறிவிப்பு கொ டுக்கும் வரை இந்த நிலை நீடிக்கும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்ட

;