tamilnadu

img

கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்து, நிறைவேற்றித் தருக... அரசியல் கட்சிகளுக்கு தனித்து வாழும் பெண்கள் வேண்டுகோள்....

திருச்சி:
தமிழக விதவைப் பெண்கள், முதிர்க்கன்னிகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆகிய தனித்து வாழும் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற தமிழ்நாடு விதவைப் பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அரசியல் கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும்  அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களது  தேர்தல் அறிக்கைகளில் இக்கோரிக்கைகளை சேர்த்து நிறைவேற்றித்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இக்கூட்டமைப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுஉறுப்பினரும் ஜனநாயக மாதர்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான உ.வாசுகியைச் சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். அவர்கள் அளித்த மனுவில் உள்ள கோரிக்கைகள் வருமாறு:

1. விதவையர் நலத்துறை ஏற்படுத்துதல்

தமிழக அரசால் மாற்றுத் திறனாளி களுக்கென தனியாக நலத்துறை உருவாக்கப்பட்டிருப்பது போல 40 லட்சத்திற்கு மேல் இருக்கும் விதவைப் பெண்களுக்கும் விரிவான மாநிலக் கொள்கையை வெளியிட்டு விதவையர் நலத்துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

                                        *********************

2. புள்ளி விபரங்கள் சேகரித்தல்

விதவைப் பெண்களின் வாழ்வு நிலை குறித்த மாநிலம் தழுவிய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டு, அதனடிப்படையில் பல்வேறு நிலையிலும் அவர்களின் வாழ்வு மேம்பட நிதி ஒதுக்கீடும் வளர்ச்சித் திட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும்.

                                        *********************

3. விதவைகள் பாகுபாடு மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் விதவைகளது சமத்துவ உரிமைகள் நிலைநாட்டப்பெறும் நோக்கில் ‘விதவையர் பாகுபாடு மற்றும்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்’ (வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989போன்று) இயற்றப்பட வேண்டும்.

                                        *********************

4. விதவையர் மற்றும் முதியோர் ஓய்வூதியத்தை ரூபாய் 3,000 ஆக உயர்த்துதல்

விதவையர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ. 3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தனித்து வாழும் பெண்கள் என்ற ஒன்றை மட்டும் தகுதியாக வைத்து இந்த உதவித்தொகையினை வழங்க வேண்டும்.அரசாங்க ஆணையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்ற அனைத்து நிபந்தனை களையும் நீக்க வேண்டும்.

                                        *********************

5. வீடு கட்டும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்குதல்

அரசு நிதி உதவி மூலம் வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அத்தோடு வீடு கட்டுவதற்கு அரசு கொடுக்கும் முதல் தவணைத் தொகையையும் அதிகரித்துக் கொடுக்க வேண்டும்.

                                        *********************

6. இலவசப் பட்டா

வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனையும் மற்றும் கோயில் இடங்கள், புறம்போக்கு இடங்களில் வாழும் விதவை பெண்களுக்கு இலவசப் பட்டாவும் வழங்குதல், கோயில் நிலங்களில்வசித்து வருவதால் பட்டா கிடைப்பதில் மிகச்சிரமமாக இருப்பது, பலர் வீட்டுமனையே இல்லாமல் வசித்து வருவது போன்ற காரணங்களால் பல ஏழை, எளிய விதவைப் பெண்கள் வீடுகட்ட முடியாமல் தவிக்கிறார்கள். கோயில் நிலத்தில் பல தலைமுறைகளாகக் குடியிருந்து வருபவர்களுக்கு இலவசப் பட்டா வழங்கவும், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கவும் வேண்டும்.

                                        *********************

7. அரசு மற்றும் கோயில் நிலங்களை விதவைகளுக்கும் விவசாயம் செய்ய வழங்குதல்

லட்சக்கணக்கான ஏக்கர் கோயில் விளை நிலங்கள் மற்றும் அரசு விளைநிலங்கள் இருக்கின்ற சூழலில் விதவைப் பெண்களின் சுயஉதவிக்குழுக் களுக்கு இயற்கை விவசாயம் செய்யஇரண்டு ஏக்கர் நிலம் குத்தகைக்கு வழங்கிட வேண்டும். மேலும் அந்நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்ய உதவித்தொகையும் வழங்கிடவேண்டும்.

                                        *********************

8. அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு

• அரசுத் துறைகளில் மட்டுமல்லாது தனியார் துறைகளிலும் விதவைப் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

• விதவைப் பெண்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

• விதவைப் பெண்களின் வாரிசுதாரர் களுக்கு அரசு வேலைவாய்ப்புப்பெற முன்னுரிமை வழங்க வேண்டும்.

                                        *********************

9. சமூக நலத்திட்டங்கள்

ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைப் பெண்களின் மகள் திருமண நிதி உதவி, டாக்டர் தரு மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி ஆகிய மூன்று திருமண நிதிஉதவித் திட்டங்களிலும் தற்போது வழங்கப்பட்டு வரும் தாலிக்கு 8 கிராம் தங்கத்தோடு உதவித்தொகை ரூ.25ஆயிரம் என்பதை ரூ.50 ஆயிரமாகவும், பட்டப்படிப்பு படித்த அல்லது பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் தாலிக்கு ரூ.8 கிராம் தங்கத்தோடு ரூ.50 ஆயிரம் என்பதை ரூ.75 ஆயிரமாகவும் உயர்த்திட வேண்டும்.

;