tamilnadu

img

சிறு வியாபாரிகள் கடைபோட அனுமதி மறுப்பதா? திண்டுக்கல் மாநகராட்சியை கண்டித்து முற்றுகை

திண்டுக்கல்:
கொரோனாவை காரணம் காட்டி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாக சிறு வியாபாரிகளை கடை போட அனுமதி;க்காத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்துசிஐடியு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சிறு வியாபாரிகள், 33 பேர், தட்டு வியாபாரிகள் 99 பேர், பூ விற்கும் பெண்கள்40 பேர் வியாபாரம் செய்து வருகிறார்கள். மாநகராட்சி பல முறை சிறுவியாபாரிகளை அப்புறப்படுத்த முயற்சித்தது. இந்த நிலையில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி பேருந்து நிலையத்திற்குள் சிறுவியாபாரிகள், பூ விற் கும் பெண்கள், தட்டு வியாபாரிகளை கடை போட அனுமதிக்கவில்லை. ஆனால்தொற்று காலத்தில் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் இயங்கியது. ஆனால் சிறு வியாபாரிகளை மட்டும் அனுமதிக்கவில்லை. 

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர், வருவாய் அதிகாரிகளிடமும், சாலையோர சிறு வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) சார்பாக வலியுறுத்தியும் மாநகராட்சி சிறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுத்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால். சிறு வியாபாரிகளை கடை போட அனுமதிக்கவில்லை. இதனையடுத்து திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , சிஐடியு சார்பாக மாநகராட்சி ஆணையரிடம் மனுக் கொடுக்கப்பட்டது. வருவாய் அதிகாரி சாரங்க.சரவணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு தலைவர்கள், சிறு வியாபரிகள் சங்கத் தலைவர்கள், வியாபாரிகளை அவமரியாதையாக பேசியுள்ளார். இதற்கிடையில் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடை போடும் போராட்டம் நடத்துவார்கள் என அறிவித்துவிட்டுவந்தனர்.பின்னர் பேருந்து நிலையத்தில் சிஐடியு மாவட்டத்தலைவர் கே.பிரபாகரன், சாலையோர சிறு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிச்சைமுத்து. சிஐடியு நிர்வாகிகள் சி.பி.ஜெயசீலன், தவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் பி.ஆஸாத், மாதர் சங்க மாவட்டத்தலைவர் எம்.ஜானகி, நகர் செயலாளர் ராஜேஷ்வரி, அரபுமுகமது, கே.எஸ்.கணேசன், ஜோதிபாசு, அருள்ஜோதி, பேருந்து நிலைய சிறுவியாபாரிகள் சங்க தலைவர்கள் பாண்டி, ஜோசப், வனம்,முருகேசன், கிறிஸ்டினாமேரி. பார்வதி. சகாயம் ஆகியோர் பங்கேற்ற போராட் டக்குழு கூடியது. பின்னர் எப்போதும் போல சிறு வியாபாரிகள் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்தனர். 

இந்த போராட்டம் குறித்து பூ விற்கும் கிறிஸ்டினா மேரி கூறியதாவது: பேருந்து நிலையத்தில் கடை அமைத்துக்கொள்வது குறித்துகடந்த 10-ஆம் தேதி மனுக் கொடுத்து பேசினோம். செப்.21-ஆம்தேதி கடை போட்டுக்கொள்ளுமாறு ஆணையர் கூறினார். ஆனால்தற்போது மறுக்கிறார். வருவாய் அதிகாரி சரவணன் எங்களை பேருந்து நிலையத்திற்கு பூக்கடை போடக்கூடாது எனக்கூறியதோடு தரக்குறைவாகவும் பேசினார். 35 ஆண்டுகளாக நாங்கள் இங்கு தான் கடை போட்டு பிழைப்பு நடத்தி வருகிறோம். பேருந்து நிலையத்தில் கடை போடத்தான் போகிறோம். எது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் என்றார்.

‘புதிதாக கட்டப்பட்ட கடைகளில் பெரும் ஊழல்’
மாதர் சங்க மாவட்டத்தலைவர் எம்.ஜானகி கூறுகையில், “கொரோனா சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் கடும்பொருளாதார இழப்பை சந்தித்தனர். வட்டிக்கு கடன் பெற்று வாழ்க்கையை சமாளித்து வருகின்றனர். இந்தச் சூழலில் பேருந்து நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடை போடக் கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் தடை விதிக்கிறார்கள். இது தொடர்பாக சாரங்க சரவணன் என்ற அதிகாரி எங்களிடம் அநாகரீகமாகப் பேசினார். அவரது பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீங்கள் கடை போட்டுவிடுவீர்களா என சவால் விடுகிறார். மிரட்டலுக்கு நாங்கள் பணிய மாட்டோம்” என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் ஆசாத் கூறுகையில், “ திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக பேருந்து நிலையத்தில் புதிய கடைகளும், காந்தி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்டகடைகளிலும் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. பல லட்சம் மோசடி செய்து உள்ளனர். ஆளுங்கட்சியினருக்கு துணையாக மாநகராட்சிநடத்தும் மோசடிகளை மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட கட்சி அம்பலப்படுத்தியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது பேருந்து நிலையத்தில்கடை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்றவர்களை மாநகராட்சி அதிகாரி தரக்குறைவாக பேசியுள்ளார்.அவரது பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

;