tamilnadu

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குக

தருமபுரி, அக்.6- விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குதோடு பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என விதொச  வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் தொகுதியில் பெரும்பகுதி மக்கள் நிலமற்ற ஏழைகளாக உள்ளனர். இவர்களில் பலருக்கு சொந்தவீடு இல்லை. 1980-1990ஆம் ஆண்டு களில் பல்வேறு இடங்களில் அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் குடியிருந்து வருகின்றனர். தற்போது இந்த தொகுப்பு வீடுகள் பழுதடைந்து உள்ளது. மேலும் வீடு இல்லாதவர்கள் ஒரு தொகுப்பு வீட்டிலேயே இரண்டாக  தடுப்பு வைத்து இரு குடும்பங்களாக குடியிருந்து வரும் அவலநிலையும் உள்ளது. மேலும் பல கிராமங்களில் தலித் மக்களுக்காக ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட பட்டா வுக்கான இடத்தை பயனாளிகளுக்கு அளவீடு செய்து வழங்கப்படாத சூழ்நிலையும் உள்ளது. குறிப்பாக அரூர் வட்டம், கிளானூரில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 1996ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச மனைப் பட்டாவுக்கான இடமும், அரூர் அம்பேத்கர் நகரில் வழங் கப்பட்ட மனைப்பட்டாவுக்கான இடத்தையும் பயனாளி களுக்கு அளவீடு செய்து கொடுக்கப்படவில்லை. அதே போல் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், போளையம்பள்ளி ஊராட்சியில் உள்ள ஜடையம்பட்டி கிராமத்தில் (சர்வே எண் 396,397,412) மனைப்பட்டா கொடுக்கப்பட இடத்தில் நிலத்தினை அளவீடு செய்து காட்டப்படவில்லை. இதனால்  மனைப்பட்டா இருந்தும் வீடுகட்ட முடியாமல் தவித்து வரு கின்றனர். அதேபோல் நீண்ட ஆண்டுகாலமாக வீடுகட்டி குடி யிருந்து வரும் மொரப்பூர் அண்ணல்நகர் ரசலப்பட்டி, கே.ஈச்சம்பாடி, அரூர் ஒன்றியம் தீர்த்தமலை, வேடக் கட்டமடுவு பஞ்சாயத்து கருங்கல்பாடி, புதூர், மூன்றம் பட்டி ஆகிய கிராம மக்களின் குடியிருக்கும் வீட்டிற்கு மனைப்பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் எம்.முத்து கூறுகையில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் வழங்கிய இலவச மனைப்பட்டாவுக்கான இடத்தை பயனாளிகளுக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட வேண்டும். பல ஆண்டு களாக வீடுகட்டி குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். மேலும் கிளானூர், டி.ஆண்டியூர், மொரப்பூர் ஒன்றியத்தில் கோமாளிப்பட்டி ஆகிய கிராம மக்களுக்கு இலவச மனைப்பட்டாவும், பழுத டைந்த தொகுப்பு வீடுகளை பழுது பார்க்க தமிழக அரசும்,  மாவட்ட நிர்வாகமும்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

;