tamilnadu

img

தருமபுரியில் ஊராட்சித் தலைவர்களுக்கு ஒருநாள் சிறப்பு அறிமுக பயிற்சி

தருமபுரி, ஜன. 22- தருமபுரி மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலை வர்களுக்கான ஒரு நாள் சிறப்பு அறிமுக பயிற்சி வகுப் பினை  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கிவைத்தார்.   இதன் பின் அவர் கூறுகையில், உள்ளாட்சி அமைப் புகளின் பொறுப்புகள், நிர்வாக அதிகாரம், அரசின் திட்டங்கள், குடிநீர் விநியோகம், தெருவிளக்கு மற்றும் துப் புரவு சுகாதாரம், கழிவுநீர் கால்வாய் சீரமைத்தல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும். பொது மக்களிடையே நேரடியாக நெருங்கிய தொடர்பை ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளதால்  அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருந்து மக்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். ஒகே னக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் முறையாக செய்வதை ஆய்வு செய்து கண்காணிக்க வேண் டும். சீரான குடிநீர் விநியோகம் செய்தால் கோடை காலங்க ளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு தவிர்க்கலாம். பல்வேறு அரசு திட்டங்கள் மத்திய மாநிலங்கள் வாயி லாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியான பயனாளி களை தேர்வு செய்து அரசின் நலத்திட்டங்கள் வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா இல்லாத நபர்களுக்கு இல வச வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடு, பாரத பிரதம ரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டி வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறி னார். முன்னதாக இந்நிகழ்விற்கு  மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி தலைமை வகித்தார்.இதில் பாப்பிரெட்டிப் பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்ட மன்ற உறுப்பினர் சம்பத்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, இணை இயக்குநர் (ஊரக வளர்ச்சி இயக்குநரகம், சென்னை) மகேஷ்பாபு,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வேத நாயகம், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலைத் தலைவர் பூக்கடை ரவி, பாலக்கோடு கூட்டு றவு சர்க்கரை ஆலைத் தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் பொன் னுவேல், ஒன்றியக்குழுத் தலைவர் நீலாபுரம் செல்வம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசசேகர், உதவி இயக்குநர் (தணிக்கை) லோகநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் குட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள் ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;