tamilnadu

img

கிரமாசபைக் கூட்டம் நடத்தாததைக் கண்டித்து எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.17- கொரோனா நோய்த்தொற்று பரவும் என காரணம் காட்டி சுதந்திர தினத்தன்று நடக்க இருந்த கிராம சபையை ரத்து செய்ததை கண் டித்து எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை - சேலம் வரை எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தரு மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வரு கின்றது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம்,  பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுக்கோ ணாம்பட்டியில் விவசாய நிலத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது எட்டு வழிச்சாலைக்கு எதிரான  வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பொழுது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரும் 2025 வது ஆண்டிற்குள் எட்டு வழிச்சாலையை முடிப்போம் என  தெரிவித்திருப்பதை கண்டித்தும், மக்கள் அதிக அளவில் கூடும் மதுபானக் கடையை  திறந்து வைத்துள்ள தமிழக அரசு, கிராமசபை  நடத்தினால் கொரோனா நோய்த்தொற்று பரவக்கூடும் என காரணம் காட்டி ஆக. 15ஆம்  தேதியன்று நடக்க இருந்த கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ததை கண்டித்தும் ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

;