tamilnadu

img

மருத்துவமனையில் மருத்துவர் பணிக்கு வராததால் கால்நடைகளுடன் காத்திருந்த விவசாயிகள்

தருமபுரி, பிப்.16- பாலக்கோடு கால்நடை மருத்துவ மனையில் நீண்ட நேரமாகியும் மருத்துவர் வராததால் கால்நடை களுக்கு சிகிச்சைக்காக வந்திருந்த விவசாயிகள் காத்திருக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டாரம் மலை பகுதியாகும்.  இங்குள்ள கிராமங்களில் கால்நடை  வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.  இந்நிலையில் கால்நடைகள் அவ்வப் போது நோய் தாக்குதலுக்குள்ளா கின்றன.  இதற்காக பாலக்கோடு கால் நடை மருத்துவமனை சிகிச்சைக்காக  விவசாயிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 15 ஆம் தேதி யன்று விவசாயிகள் கால்நடைகளுக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர். ஆனால்  மருத்துவர் வரவில்லை. இதில் ஆவேச மடைந்த விவசாயிகள் கால்நடை களுடன் காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர். இத்தகவலறிந்த கால்நடை துறை உதவி இயக்குனர் மருத்துவர் ராஜேந்திரன் சம்பந்தப் பட்ட கால்நடை மருத்துவமனைக்கு வந்து விவசாயிகளுடன்பேச்சு வார்த்தை நடத்தினார். கால்நடை மருத்துவர் செந்தில்குமார் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டதாக உதவி  இயக்குனர் தெரிவித்தார். மேலும் கால்நடைகளுக்கு சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவர் தியாக சீலன் என்பவரை வரவழைத்து கால் நடைகளுக்கு சிகிச்சை  அளிக்க ஏற் பாடு செய்தார். மேலும் கால்நடை மருத்துவர் செந்தில்குமார் மீது புகார் செய்தால், அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணை இயக்குனர் ராஜேந்திரன் தெரி வித்தார். இதையடுத்து கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு விவசாயி கலைந்து சென்றனர். 

;