tamilnadu

img

3 ஐம்பொன் சிலைகள் 42 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருப்பது கண்டுபிடிப்பு...

தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் 42 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 3 ஐம்பொன்சிலைகள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயில் மகா மண்டபத்தில்  வைக்கப்பட்டிருந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமன் ஆகிய 4 ஐம்பொன் சிலைகளை கடந்த 23.11.1978-ல் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இதுகுறித்து, கோயில் நிர்வாக அதிகாரி செல்வராஜ் என்பவர் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவ்வழக்கு கடந்த 25.01.1988-ல் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதே ஆண்டில்நாச்சியார்கோயிலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கலியன், ராஜேந்திரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வரும்சிங்கப்பூரில் வசிக்கும் விஜயகுமார் என்பவருக்கு, 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன்தலைநகர் லண்டனில் உள்ள டீலர் ஒருவர் சிலைகள் விற்பனைக்கு உள்ளதாக இணையதளத்தில் சிலைகளின் படங்களை வெளியிட்டார். 

அவற்றில் தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதைக் கண்டறிந்த விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் அப்படங்களை ஆய்வு செய்து தமிழக சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பினர். அந்த படங்களில் இருப்பது மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் கோயிலில் இருந்து 1978-ஆம் ஆண்டு திருடப்பட்ட ராமர், லட்சுமணர் மற்றும் சீதை ஐம்பொன் சிலைகள் என்பதை சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்உறுதி செய்து, அதற்கான ஆதாரங்களைபிரிட்டன் அரசுக்கு அனுப்பினர். தகவல்அறிந்த அந்த டீலர் அந்த 3 சிலைகளையும் லண்டன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அச்சிலைகளை தமிழகத்துக்கு எடுத்து வர இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

;