tamilnadu

வெப்பமயமாதலால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு

புதுதில்லி,ஏப்.24-அதிகரிக்கும் உலக வெப்பமயமாதல் காரணிகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 31சதவீதம் குறைந்துள்ளதாக ஸ்டேன்ஃபோர்டு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.பருவ மாற்றங்களால் பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வறிக்கை தேசிய அகாடமியின் அறிவியல் செயல்முறைகள் (ஞசூஹளு) இதழில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில், பருவ மாற்றங்கள் இந்தியாவின் வளர்ச்சியை 31 சதவீதம் பாதித்துள்ளதாகவும் மனித செயல்பாடுகளால் உலக வெப்பமயமாதல் அதிகரித்துள்ள தாகவும், இதன்காரணமாக நாடுகளுக்கிடையில் 1961 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் பொருளாதார சமத்துவமின்மை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.மேலும், பணக்கார நாடுகள் மேலும் செல்வ வளங்களை குவித்துள்ளன. ஆனால் ஏழை நாடுகள் மேலும் ஏழ்மையடைந்துள்ளன. பருவ மாற்றத்தால் குளிர்ப் பிரதேசமான நார்வே போன்ற நாடுகள் சில பொருளாதார பயன்களைப் பெற்றுள்ளதாகவும், இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சியில் இழப்புகளைச் சந்தித்துள்ளன. உலகமயமாக்கல், தொலைத்தொடர்பு மற்றும் தொழில்துறை 4.0 புரட்சி கடந்த 50 ஆண்டுகளில் பொருளாதார மற்றும் பருவ மாற்றங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கெடுத்தவரும், ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் புவி அமைப்பு அறிவியல் துறை பேராசிரியருமான மார்ஷெல் புர்க்கே கூறுகையில், சில பெரிய பொருளாதார நாடுகள் அவர்களுடைய பொருளாதார வெளிப்பாட்டுக்கு ஏற்ற சரியான வெப்பநிலையைக் கொண்டுள்ளன. உலக வெப்பமயமாதல் அவர்களை மலை உச்சியில் இருந்து தள்ளி விட்டுவிடவில்லை. ஆனால் பெரும்பாலான நாடுகளில் வெப்பமயமாதல் கவலை தரக்கூடியதாய் உள்ளது என்று தெரிவித்தார்.

;