tamilnadu

img

மறுக்கப்படுவது இடஒதுக்கீடு மட்டுமல்ல இந்திய அரசியலமைப்புச் சட்டமும் - ஈரோடு க.ராஜ்குமார்

கடந்த மூன்று ஆண்டுகளாக, மத்திய அரசு, இளநிலை மருத்துவப் படிப்பு மற்றும்  முதுநிலை பட்டப்படிப்பிற்கான இடங்களில்,  இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய 27 சதவிகித இட ஒதுக்கீட்டை தராமல் துரோகம் இழைத்து வருகிறது.  2017-18 ஆம் ஆண்டிலிருந்து 2019-2020 முடிய மூன்று ஆண்டுகளில், அனைத்து மாநிலங்களிலிருந்தும் மத்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட, 15 சதவிகித இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் 11879 ஆகும். இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு  27 சத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தர மறுத்ததால் இழப்பு 3207 இடங்களாகும்.

 மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பிற்கான இடங்களில், மத்திய அரசின் தொகுப்பிற்கு அளிக்கப்பட்ட 50 சதவிகித இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், 2017 - ல் 3001 இடங்களும், 2018 -ல் 2429 இடங்களும், 2019 - ல் 2207 இடங்களும், 2020 - ல் 2155 இடங்களும் ஆக மொத்தம் 9892 இடங்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்கள் பறிக்கப்பட்டுவிட்டன.  இந்தியாவில், தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பிற்கான இடங்கள் 1758 உள்ளது. இதில் 50 சதவிகிதம் இடங்கள், அதாவது, 879 இடங்கள் மத்திய அரசின் தொகுப்பிற்கு  வழங்கப்படுகின்றன. இந்த இடங்களில் தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகிதமும் ஒதுக்கப்படுவதில்லை. மத்திய அரசின் 27 சதவிகிதமும் ஒதுக்கப்படுவதில்லை.

 இந்த ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள, மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பிற்கான,  நீட் தேர்வு அறிவிக்கையில்,   இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு, மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும், மாநில அரசுகளிடமிருந்து தொகுப்பிற்காக பெறப்பட்ட இடங்களுக்கு  பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த இடங்களில் மத்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள கல்லூரிகளில் ஓரிரு சதவிகித இடங்களே உள்ளன. மிக பெரும்பான்மையான இடங்கள் மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு வழங்கும் இடங்களாகும். மத்திய அரசின் நிலைபாட்டின்படி, மொத்தம் உள்ள 30774 இடங்களில், 50 சதவிகிதம் மத்திய அரசே நிரப்பும். சட்டப்படி இதில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, 4155 இடங்கள்   ( 27 சதவிகிதம் ) வழங்கப்பட வேண்டும். தற்போது மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டின்படி, அதாவது, மாநிலங்களிடமிருந்து  பெறப்பட்ட இடங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்ற அடிப்படையில்,  வெறும், 300 இடங்களே கிடைக்கும் 3800  இடங்கள் பறிபோகும். இப்படி பறித்துக்கொள்ள மத்திய அரசுக்கு உரிமை கிடையாது. ஏனெனில் 2005 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, இந்திய அரசியலமைப்புச்சட்டம் திருத்தம் எண். 93 ன்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை தடுத்து நிறுத்திட யாருக்கும் அதிகாரம் கிடையாது.

 இதற்கு பின்னணியாக இருந்தது மகாராஷ்டிரா மாநில அரசுக்கு எதிராக பி.ஏ.இனாம்தார் தொடுத்த வழக்காகும்.  இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அரசு உதவிப் பெறாத கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செல்லாது என்பதாகும். இந்த தீர்ப்பின் விளைவாகவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளை எந்த ஒன்றாலும் தடுத்திட முடியாது  என  இந்திய அரசியலமைப்புச் சட்டம் எண்.93 நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஏதுவாக இந்திய அரசியலமைப்பு ஷரத்துக்கள் 15 மற்றும் 5 இரண்டும் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில்தான், 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் மத்திய அரசு, இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவு மாணவர்கள் உயர் கல்வி பெற 27 சத ஒதுக்கீடு செய்து அரசு ஆணை பிறப்பித்தது. இன்று மத்திய அரசு அதை உதாசீனப்படுத்தி சமூக நீதி வழங்க மறுக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 46 இட ஒதுக்கீட்டிற்காக பிற்படுத்தப்பட்டவர்களை கண்டறிய சரியான வழிகாட்டுதலை தந்துள்ளது. இட ஒதுக்கீடு என்பது ஒரு பகுதியினரை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கு மட்டுமல்ல, நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டுள்ள சமூகத்தினரை கண்டறிந்து அவர்களை உயர்த்துவதற்கான ஏற்பாடே ஆகும். அத்தகைய உயர் நோக்கத்தை இன்றைய மத்திய அரசு சிதைத்து விட்டது.

;