tamilnadu

img

வீட்டுமனை: புதிய அரசாணையும் - தீர்வும் - வீ.அமிர்தலிங்கம்

தமிழ்நாட்டில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடின்றி, வீட்டுமனையின்றி, சாலையோரங்களில், ஆற்றுக்கரைகளில் தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வேதனை நீடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நீடித்தப் பெரும் போராட்டங்களால், 2006ஆம் ஆண்டு ஒருமுறை சிறப்புத்திட்டம் நிறைவேற்றப்பட்டு 2013ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் காலநீட்டிப்பு செய்தும், சில அரசாணைகள் வெளியிடப்பட்டும் சில லட்சம் பேருக்கு வீட்டு மனையும், பட்டாக்களும் கிடைத்தன. 

அரசாணை அறிவிப்பும் காலதாமதமும்

2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நிதியமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் 5 முறையும், ஜெயக்குமார் ஒரு முறை யும் பட்ஜெட் அறிவிப்பினை வெளியிட்டார்கள். 6 முறையும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் தலா 3 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும் என்றே  அறிவித்தார்கள். அப்படி வழங்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டில் பட்டா வேண்டி காத்துக்கிடக்கும் சரிபாதி பேருக்கு வழங்கியிருக்க முடியும்.ஆனால் அது வெறு அறிவிப்பாகவே முடிந்து போனது. கடந்த 2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதிஅமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் 2018 மார்ச் மாதம் 15ஆம் தேதி 3 லட்சம் பேருக்கு பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுமென அறிவித்தார். ஆனால் அரசாணையாக வெளியிடுவதற்கு ஏறக் குறைய பத்து மாதங்கள் ஆகி 27.11.2018ல் அரசாணை 465ஆம், 24.12.2018ல் அரசாணை 496ம் வெளியிட்டது. இந்த காலங்களில் அர சாணை வெளியிடக் கேட்டும் - வெளியிடப்பட்ட அரசாணையின் படி பட்டா வழங்கிட பணிக ளைத் துவக்கக் கோரியும் விதொச வலுவான போராட்டங்களை நடத்தியுள்ளது. 

புதிய அரசாணை என்ன சொல்கிறது?

முன்னர் போடப்பட்டு செயல்படுத்தாது இருந்த இரண்டு அரசாணைகளையும் இணைத்து, தற்போது மூன்றாவதாக அர சாணை (நிலை) எண்.318, நாள்.30.08.2019 ஒரு வழியாக வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேப கரமற்ற புறம்போக்கு இடங்களில் 5 ஆண்டுக்கு மேலாக குடியிருப்போருக்கு அந்த இடத்தையே வரன்முறை செய்து பட்டா வழங்கிடவும், கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன்கருதி வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா  வழங்கிடவும், நீர்நிலைகள், கால்வாய் கள், சாலைகள் போன்ற இடங்களில் குடியி ருப்போருக்கு மாற்று இடம் அடுக்குமாடி குடி யிருப்புகள் அமைத்துத்தரவும், மேய்கால், மந்தைவெளி உள்ளிட்ட ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு வகைமாற்றம் செய்யப்பட்டு பட்டா வழங்கிட வும் என சில நல்ல அம்சங்களை இந்த அர சாணை உள்ளடக்கியுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர், நிலநிர்வாக ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் திட்ட செயல்பாட்டை மாதாந்திர அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும், கண்காணிக்க வேண்டுமென்பது வரவேற் கத்தக்கதாகும். 

ஒரு நாள் போதுமா?

முன்னர் போடப்பட்டு செயல்படுத்தாது இருந்த இரண்டு அரசாணைகளையும் இணைத்து, தற்போது மூன்றாவதாக அர சாணை (நிலை) எண்.318, நாள்.30.08.2019 ஒரு வழியாக வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேப கரமற்ற புறம்போக்கு இடங்களில் 5 ஆண்டுக்கு மேலாக குடியிருப்போருக்கு அந்த இடத்தையே வரன்முறை செய்து பட்டா வழங்கிடவும், கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன்கருதி வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா  வழங்கிடவும், நீர்நிலைகள், கால்வாய் கள், சாலைகள் போன்ற இடங்களில் குடியி ருப்போருக்கு மாற்று இடம் அடுக்குமாடி குடி யிருப்புகள் அமைத்துத்தரவும், மேய்கால், மந்தைவெளி உள்ளிட்ட ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு வகைமாற்றம் செய்யப்பட்டு பட்டா வழங்கிட வும் என சில நல்ல அம்சங்களை இந்த அர சாணை உள்ளடக்கியுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர், நிலநிர்வாக ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் திட்ட செயல்பாட்டை மாதாந்திர அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும், கண்காணிக்க வேண்டுமென்பது வரவேற் கத்தக்கதாகும். 

முன்னுரிமை

நீர்நிலை புறம்போக்கு இடங்களில் குடி யிருப்போருக்கு, மாற்று இடம், குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர அரசாணையிலும் தெரிவிக்கப்பட்டுள் ளன. ஏற்கனவே இந்த பணிகள் நாகை, திருவா ரூர், தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட் டங்களில் துவங்கப்பட்டுள்ளது. கிராமப்புற, நகரப்புற ஏழைகளுக்கு மாற்று இடம் வழங்கப் படும்போது அவர்களின் வேலை, அவர்க ளின் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட வாழ்வா தாரம் பாதிக்கப்படாத வகையிலும், விளிம்பு நிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவை யர்களுக்கு முன்னுரிமை என்பதையும் அரசு மற்றும் வருவாய்த்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

தமிழ்நாட்டில் உள்ள 26 வகையான புறம்போக்கு நிலங்கள் பெரும்பகுதி வசதி படைத்தவர்கள், உள்ளூர் ஆதிக்க சக்திகள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் வசம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதில் ஒருபகுதியை சிலர் முறை கேடாக பட்டா பெற்று வைத்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் அப்படி வருவாய் நிலை ஆணைக்குப் புறம்பாக (Revenue Standing Order) பணபலத்தாலும், அரசியல் பலத்தாலும் வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்தும்,  மனை இல்லாதவர்களுக்கு மனை வழங்க வேண்டும்.  இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் வீட்டு மனைப்பட்டா, வீட்டுமனை வழங்கிட முதல் அரசாணையில் வருமான வரம்பு 1 லட்சமாக வும், தற்போது திருத்தப்பட்ட அரசாணையில் 3 லட்சமாகவும் வரம்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் வரன்முறை செய்து பட்டா வழங்கிட வருமான வரம்பை தாண்டியவர்களிடம் தொகை வசூலிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே அந்த அரசாணைகள் திருத்தப்பட்டு தொகை வசூலித்தவர்களிடம் திருப்பித்தரப்பட்டு, தகுதி யான அனைவருக்கும் வருமான வரம்பின்றி  இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப் பட்டன. அதனால் தான் அதிக அளவில் (6 லட்சத்திற்கு மேல்) மனைப்பட்டாக்கள் அந்த காலத்தில் வழங்கப்பட்டன. 

தேவை- விரிவுப் படுத்தப்பட்ட சிறப்புத்திட்டம்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத்திட்டத்தில், பட்டா வழங்கிட வகைப் படுத்தப்பட்ட பிரிவினர் எண்ணிக்கையைப் பார்த்தால், குறிப்பிட்ட ஒன்றிரண்டு லட்சம் பேருக்கே மனைப்பட்டா - மனை வழங்க முடியும் என்பதே தெளிவாகிறது. இது ‘மலைக்கும் மடுவிற்குமான’ வித்தியாசமாக இருக்கிறது. ஆகவே, வீட்டுமனை - வீடின்றி பரிதவிக்கும், பல லட்சம் குடும்பங்களுக்கு பட்டாவும், மனையும் கிடைக்கும் வகையிலான சிறப்புத் திட்டமாக - தொலைநோக்குடன் இது விரிவுபடுத்தப்பட வேண்டும். அதுவே பலதலைமுறையாக வெயி லும், கடுங்குளிரிலும், மழையிலும் அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு கிடைக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும். அரசு, அரசாணை வெளியிட்டுவிட்டது. அதை எந்தளவிற்கு செயல்படுத்தும் என்பதும், அதற்கான தடைக் கற்களாக எவை, எவை வந்து நிற்கும் என்பதும், ஏற்கனவே வெளி யிடப்பட்டுள்ள பல அரசாணைகளை அமல் படுத்தும் போது, நமக்கு கிடைத்துள்ள அனுப வங்களாக இருக்கின்றன. அரசு வெளி யிட்டுள்ள தற்போதைய அரசாணையை பயன் படுத்துவது நமக்கு முன் உள்ள மிக அவசர, அவசியமாகும். கிராமங்களிலும், நகரங்க ளிலும் உள்ள நமது அணிகளுக்கு இதைக் கொண்டு சேர்க்கவும், கிராமப்புற - நகர்ப்புற ஏழை களை அணிதிரட்டவும் இன்றே பணிகளைத் தொடருவோம்...

கட்டுரையாளர் : மாநிலப் பொதுச்செயலாளர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்
 



 

;