tamilnadu

img

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு வெப்ப காற்று நீடிக்கும் 

சென்னை
கோடை வெயில் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சதத்துடன் சுழன்று வருகிறது. குறிப்பாக கொரோனாவால் உருகுலைந்துள்ள சென்னை மண்டலத்தில் நேற்று 106 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் வெயில் ஒருபக்கம் என்றால் மறுபக்கம் அனல்காற்று வேறு அதிகமாக வீசி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகின்றனர். 
இந்நிலையில், சென்னையில் வெப்பக்காற்று மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை மண்டல வானிலை துணை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,"அம்பன் புயல் காரணமாக சென்னையில் வடகிழக்கு காற்று வீசியது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் மேற்கு திசையில் உருவாகும் காற்று வெப்பம் மிகுந்ததாக உள்ளது. இந்த காற்று கடலின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடுவதால் இதன் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.  இந்த சூடான காற்று மேலும் 2 நாட்களுக்கு வீச வாய்ப்புள்ளது. அதன் பின்னர் படிப்படியாக குறையும். இந்த காலகட்டத்தில் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் 41 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது" என அவர் கூறியுள்ளார்.  
 

;