tamilnadu

img

பிரபல ஹாலிவுட் நடிகர் டேனி மாஸ்டர்சன் மீது பாலியல் குற்றசாட்டு....

லாஸ்ஏஞ்சல்ஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகரான டேனி மாஸ்டர்சன் தொலைக்காட்சி தொடர்களில் இருந்து ஹாலிவுட் துறைக்கு வந்தவர். இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மாஸ்டர்சன் சிறந்த அறிவியலாளரும் கூட. மல்யுத்தம் தொடர்பான நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றவர்.  

இந்நிலையில், 2001 மற்றும் 2003-ஆம் ஆண்டுக்கு இணைப்பட்ட காலத்தில் தனது வீட்டில் மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பெண்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாஸ்டர்சனுக்கு 45 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. 

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வழக்கு தொடுத்து 1 வருடம் ஆக போகிறது. ஆனால் வழக்கு விபரம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.   

;