tamilnadu

img

பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் மரணம்.....

மும்பை 
பிரபல பாலிவுட் நடிகரான இர்பான் கான் ஆசிய திரையுலகில் பிரபலமானவர். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடந்துள்ள இர்பான் 25-க்கும் மேற்பட்ட மெகாஹிட் படங்களை தன் வசம் வைத்து இந்தியத் திரையுலகில் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றவர். 

டெலிவிஷன் துறையிலும் நடித்து வந்த இர்பான் கான் கடந்த 2018-ஆம் ஆண்டு நியூரோஎண்டோகிரைன் டியூமர் வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தார். பின்பு மீண்டும் திரையுலகிற்குத் திரும்பி அங்ரெஜி மீடியம் என்ற இந்தி படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த மார்ச் 13-ஆம் தேதி வெளியானது. மீண்டும் உடல்நலக்குறைவால் (குடல் தொற்று) பாதிக்கப்பட்ட இர்பான் கான் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்தார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதிலும் உடல்நிலை மோசமாகி இன்று காலை மரணமடைந்தார்.

உயிரிழந்த இர்பான் கானுக்கு சுடப்பா சிக்தர் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.  
 

;