tamilnadu

img

பெற்றோர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் மருத்துவர் பேச்சு

தஞ்சாவூர், மார்ச் 15-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை அன்று பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டி. முருகேசன் தலைமையில் நடை பெற்றது.  பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.வீரம்மாள் வரவேற்றார். கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலு வலர் கோ.ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் பாக்கியம் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி புரவலரும், முன்னாள் மாணவருமான எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் துரை.நீலகண்டன், மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கிப் பேசுகையில், “ ஆசிரியர் - மாணவர் உறவு உன்னதமான உறவு. அதில் தவறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பட்டாடையில் தெற்று ஏற்படுவது போல அமைந்து விடக்கூடாது.  பள்ளி வளர்ச்சியில் பெற்றோர்கள் அக்கறை செலுத்த வேண்டும். சமுதாய அக்கறை உள்ள பெற்றோர்களால் தான், மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவ முடியும். பள்ளியில் நடக்கும் கூட்டங்களில் பெற்றோர் கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் படிப்பு குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். வெறுமனே ஆசிரியர்களையும், அரசையும் குறை சொல்லாமல், மாணவர் நலன் காக்க ஆசிரியர்களோடு இணைந்து செயலாற்ற வேண்டும். கொரோனா வைரஸ், மனித குலத்திற்கு இன்று பெரும் அச்சுறுத்த லாக உள்ளது. தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் அவற்றை எதிர்கொள்ள, மாணவர் கள் தயாராக விழிப்புணர்வு பெற வேண்டும்” என்றார்.  கூட்டத்தில், கவிஞர் மு.ரெ.முத்து, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சுதா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வீரையன், கவிதா, ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, வனிதா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் செ.ராமநாதன் நன்றி கூறினார்.  இக்கூட்டத்தில், “பள்ளிக்கு இதுவரை விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்கள் 8 பேருக்கும், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, விளையாட்டு போட்டி, கராத்தேப் போட்டி, திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கும், கல்வித் தொலைக்காட்சி யில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.  மேலும், “இப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக, ஒட்டங் காடு பஞ்சாயத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும், ஐந்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களை, இப்பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென” தீர்மானிக்கப் பட்டது.

;