tamilnadu

கொரோனா நோய் வதந்தியால் தனிமைப்படுத்தப்பட்ட பேராவூரணி வாலிபர்

தஞ்சாவூர்,மார்ச் 19-  கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இருப்பதாக பரவிய வதந்தியால்  இத்தாலி யில் இருந்து நாடு திரும்பிய பேராவூரணி வாலிபர்  தனி மைப்படுத்தப்பட்டு, கண்கா ணிப்பில் வைக்கப்பட்டுள் ளார்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சிதம்பரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் இத்தாலியில் பொறியாளராக கடந்த சில வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் 18 ஆம் தேதி புதன் கிழமை காலை இத்தாலி யில் இருந்து மும்பை திரும்பி னார். பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் வந்து, அன்று மாலையே கார் மூலம் தனது சொந்த ஊரான பேராவூரணி திரும்பி யுள்ளார்.  இவர் இந்தியா வருவ தாக இருந்த நிலையில், இத் தாலியில் சுகாதார அமைச்ச கத்தின் கண்காணிப்பில் 15 தினங்கள் வைக்கப்பட்டுள் ளார். அங்கு அவருக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில், முன் னெச்சரிக்கையாக ரத்தம், சளி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோ னா நோய்த் தொற்று ஏதும் இல்லை எனத் தெரிய வந்தது.   இதன் பிறகு உரிய மருத்துவச் சான்றிதழ்களு டன் இந்தியா வந்துள்ளார். அவருக்கு மும்பை விமான நிலையம், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களி லும் மருத்துவப் பரி சோதனை செய்யப்பட்டதில் ஆரோக்கியமாக உள்ளது தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் தாமா கவே முன்வந்து பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை சென்று, தான் இத்தாலியில் இருந்து ஊர் திரும்பிய விபரத்தை தெரிவித்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட் படுத்திக் கொண்டு, மருத்துவ அலுவலர்களின் ஆலோ சனை பெற்று வீடு திரும்பி யுள்ளார்.  இந்நிலையில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலை தளங்களில் “இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய வாலிபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார்” என்ற ரீதியில் சிலர் வதந்தி பரப்பினர். இதனால் பேரா வூரணி பகுதியில் அச்சமான சூழல் உருவானது.  இந்நிலையில் வியாழக் கிழமை காலை பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர், இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இளைஞரை நேரில் சந்தித்து மருத்துவ பரிசோதனை நடத்தி, அவ ரிடம் விபரங்களை கேட்ட றிந்தனர்.  இதில் அவருக்கு நோய்த் தொற்று ஏதும் இன்றி, உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என்பது தெரிய வந்தது. இருந்த போதிலும் மாவட்ட ஆட்சியர், சுகாதா ரத்துறை துணை இயக்குநர் ஆகியோரின் அறிவுறுத்த லின்படி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சுகா தாரத் துறை கண்காணிப்பில் சில தினங்களுக்கு தனி மைப்படுத்தப்பட்டு, கண்கா ணிப்பில் வைக்கப்பட உள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞ ரின் தந்தை கூறுகையில், ஆரோக்கியமான நிலையில் உள்ள எனது மகன் குறித்து, முகநூலில் சிலர் தவறாக வதந்தி பரப்பி வருகின்றனர். இதனால் எனது மகன் மட்டும் இன்றி, எங்கள் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  இதுகுறித்து வட்டாட்சி யர் க.ஜெயலெட்சுமி கூறு கையில், வதந்திகளை பரப்பு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வலைத் தளங்களை தவறாகப் பயன் படுத்துவோர் மீது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக் கப்பட்டுள்ளது என்றார். 

;